தமிழகம்

ஞானேஷ்குமாரை பதவி நீக்க வேண்டும்: ‘தி இந்து’ கட்டுரைகளை குறிப்பிட்டு குடியரசுத் தலைவருக்கு ஸ்டாலின் மனு

எஸ்ஐஆர் நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்

செய்திப்பிரிவு

சென்னை: நாடு முழு​வதும் எஸ்ஐஆர் நட​வடிக்​கையை ரத்து செய்​வதுடன் தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரைப் பத​வி நீக்​கம் செய்ய வேண்​டும் என குடியரசுத் தலை​வரை திமுக தலை​வர் மு.க.ஸ்டா​லின் வலியுறுத்​தி​யுள்​ளார்.

இது​குறித்து அவர் எழுதிய கடிதத்தை அக்​கட்சி எம்.பி.க்​கள் டி.ஆர். பாலு, திருச்சி சிவா ஆகியோர் நேற்று குடியரசுத் தலை​வர் திரவுபதி முர்​முவைச் சந்​தித்து வழங்​கினர்.

அந்த மனுவில் கூறப்​பட்​டுள்​ள​தாவது: தமிழகத்​தில் எஸ்ஐஆர்-க்​குப் பிந்​தைய வரைவுப் பட்டியலில் முந்​தைய பட்​டியலை​விட 97 லட்​சத்து 37,832 வாக்​காளர்​கள் குறைவாக இருந்​தனர். இறுதிப் பட்​டியலில் 74 லட்​சத்து 7,207 பேர் குறைவாக இருந்​தனர். சராசரியாகத் தொகுதிக்கு சுமார் 31,655 பேர் நீக்​கப்​பட்டு இருந்​தனர்.

‘தி இந்து பிசினஸ்​லைன்’ வெளி​யிட்ட ஆய்​வுக் கட்​டுரையில் 20 ஆயிரத்​துக்​கும் குறைவான நீக்​கங்​கள் ஏற்​பட்ட 99 தொகுதி​களில் தவெக 24 இடங்​களி​லும், திமுக 27 இடங்​களி​லும் 30 ஆயிரத்​துக்​கும் அதி​க​மாக நீக்​கங்​கள் ஏற்​பட்ட 69 தொகுதி​களில் தவெ 52, திமுக 11 இடங்​களி​லும் 80 ஆயிரத்​துக்​கும் அதி​கமாக நீக்​கம் செய்​யப்​பட்ட 10 தொகுதி​களில் தவெக வென்​றதாகவும், திமுக வென்ற தொகுதி​களில் சராசரியாக 31 ஆயிரம் பெயர்​களும், அதிமுக வென்ற தொகுதி​களில் சுமார் 27 ஆயிரம் பெயர்​களும் நீக்​கப்​பட்​டன. இந்த மாற்​றங்​கள் தேர்​தல் முடிவு​களைப் பாதித்​திருக்​கக் ​கூடும்’ எனத் தெரி​விக்​கப்​பட்​டுள்​ளது.

திருப்​பத்​தூரில் திமுக வேட்​பாளர் கே.ஆர். பெரியகருப்​பன் ஒரு வாக்கு வித்​தி​யாசத்​திலும், கன்​னியாகுமரி, போளூர், திருக்​கோவிலூர், பரமத்தி வேலூரில் முறையே 214, 227, 285, 308 வாக்​கு​கள் வித்​தி​யாசத்​தில் முடிவு​கள் அமைந்​தன. கொளத்​தூரில் 2025 டிசம்​பருக்​குள் சுமார் 1 லட்​சத்து 3,812 பெயர்​கள் நீக்​கப்பட்​டன.

2026-ல் நான் 74,202 வாக்​கு​கள் பெற்​றேன். வித்​தி​யாசம் 8,795 வாக்​கு​கள். எனவே, எனது வெற்​றியைத் தடுக்​கும் வகை​யில் பெரு​வாரியான வாக்​காளர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேற்கு வங்​கம், பஞ்​சாப் என 30 மாநிலங்​கள் மற்​றும் யூனியன் பிரதேசங்​களின் வரைவுப் பட்​டியல்​களில் 13 கோடிக்​கும் அதி​க​மான பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

தலைமைத் தேர்​தல் ஆணை​யரின் முடிவுக்கு தேர்​தல் ஆணை​யர்​களான சுக்​பீர் சிங் சாந்து, விவேக் ஜோஷி ஆட்​சேபனைகளைப் பதிந்​துள்​ளனர்.

‘தி இந்து’ வெளி​யிட்ட செய்​தி​யில் மேற்​கு​வங்க வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் வாக்​காளர்​களின் கணக்​கெடுப்​புப் படிவங்களை பார்​வை​யிட முடி​யாத வகை​யில் கட்​டுப்​பாடுகள் இடம்​பெற்​றிருந்​த​தாக கூறப்​பட்​டுள்​ளது.

இவ்​வாறு வெளியாகி​யுள்ள ஆதா​ரங்​களின் அடிப்​படை​யில், தலை​மைத் தேர்​தல் ஆணை​யர் ஞானேஷ் குமாரை பத​விநீக்​கம் செய்ய வேண்​டும்.

தமிழகத்​தில் வரைவுப் பட்டியலில் இடம் பெறாமல் போன 97 லட்சத்து 37,832 பெயர் நீக்​கங்களின் சட்​டப்​பூர்வத்தன்மை, இறுதிப்பட்​டியல், தேர்​தல் முடிவுகளின் மீதான தாக்​கம்குறித்து உச்ச நீதிமன்​ற ஆலோ​சனை பெற வேண்​டும்.

அனைத்து மாநிலங்​களி​லும் எஸ்ஐஆர் முழுமையாக ரத்து செய்து, பட்​டியல் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். இசிஐ-நெட், இஆர்ஓ-நெட் குறித்து தடய​வியல் ஆய்வு செய்ய வேண்​டும். வாக்​குச்​சீட்டு முறையை மீண்டும் கொண்​டுவர வேண்​டும். இவ்​வாறு கூறியுள்​ளார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT