சென்னை: டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின், துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
`நமது மக்களின் ஆற்றல் மீதான அசைக்க முடியாத நம்பிக்கையுடன், துணிவோடும் தெளிவான நோக்கத்தோடும் உங்கள் விரிந்த பார்வையை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்ல வாழ்த்துகிறேன்' என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
`பாசிச சக்திகளுக்கு எதிரான போராட்டத்திலும் நமது நாட்டின் ஜனநாயக விழுமியங்களைப் பாதுகாப்பதிலும் கேஜ்ரிவால் தொடர்ந்து வெற்றிபெற வாழ்த்துகிறேன்' என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.