திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்

 
தமிழகம்

கர்நாடகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தக்கூடாது: முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ‘​கா​விரி நதிநீர் விவ​காரத்​தில் கர்​நாடகா​வுடன் முதல்​வர் விஜய் பேச்​சு​வார்த்தை நடத்​தக்​கூ​டாது’ என்று திமுக தலை​வர் மு.க.ஸ்​டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: காவிரி நீர் பங்​கீட்​டில் தமிழகத்​தின் உரிமையை நிலை​நாட்ட நாம் எடுத்த முயற்​சிகளின் வரலாறு மிக நீண்​டது. 1960-ம் ஆண்​டு​களில் தொடங்கி 1990 வரை பலமுறை பேச்​சு​வார்த்தை நடத்​தி​யும் எந்​தத் தீர்​வும் கிடைக்​காத​தால்​தான் அது கைவிடப்​பட்​டு, உச்ச நீதி​மன்ற உத்​தர​வின்​படி கருணாநிதி முதல்​வ​ராக இருந்​த​போது காவிரி நடு​வர் மன்​றம் அமைக்​கப்​பட்​டது.

கடந்த காலங்​களில் காவிரி நீர் விவ​காரத்​தில் கர்​நாடகா​வுடன் பேச்​சு​வார்த்தை நடத்த வேண்டும் என ஆலோசனை கூறப்​பட்டபோதெல்​லாம் திமுக அதை நிராகரித்​தது. ஏனெனில் பிரச்​சினையை இழுப்​ப​தாகவே அந்த பேச்​சு​வார்த்​தைகள் அமையும். குறிப்​பாக, காவிரி​யின் குறுக்கே மேகே​தாட்டு அணை கட்டு​வது தமிழகத்​தின் உரிமையை முழு​வது​மாக நிராகரிப்​ப​தாகும்.

எனவே, இதுதொடர்​பாக கர்​நாடக அரசுடன் பேச்​சு​வார்த்தை நடத்​து​வ​தால் பயனில்​லை. மேகே​தாட்டு குறித்து பேசுவதற்​காக, கர்​நாடக முன்​னாள் முதல்​வர் எடியூரப்பா அழைப்பு விடுத்​த​போது, அப்​போது முதல்​வ​ராக இருந்த நான் மறுத்​து​விட்​டேன்.

இந்​நிலை​யில் கர்​நாடகா முதல்​வருடன், தமிழக முதல்​வர் பேச்​சு​வார்த்​தை​யில் ஈடு​பட​வுள்​ளார் என வேளாண்​துறை அமைச்​சரே தெரி​வித்​தது விவ​சா​யிகளிடம் கோபத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. மேகே​தாட்டு அணை​யைக் கட்​டியே தீரு​வோம். அதற்கு மத்​திய அரசு அனு​மதி வழங்​கி​விட்​டது என்று கர்​நாடகா தொடர்ச்​சி​யாகச் சொல்​லும்​போது அவர்​களிடம் பேசி என்ன ஆகப் போகிறது?

காவிரி நீர் திறக்க உச்ச நீதி​மன்​றத் தீர்ப்​பின்​படி ஏற்​கெனவே ஒரு திட்​டம் உரு​வாக்​கப்​பட்​டு, எந்​தெந்த மாதம் எவ்​வளவு தண்​ணீர் திறக்க வேண்​டும் என்​பதை

தெளிவுபடுத்​தி​யது. அதை செயல்​ படுத்​தக் காவிரி மேலாண்மை ஆணை​யம் மற்​றும் காவிரி ஒழுங்​காற்​றுக் குழு ஆகியவை அமைக்​கப்​பட்டு விட்​டன. இந்​நிலை​யில் பேச்​சு​வார்த்​தைக்​குச் செல்​வது என்​பது தமிழக அரசின் 30 ஆண்​டு​கால சட்​டப் போராட்​டத்தை சிதைப்​ப​தாக அமைந்​து​விடும். ஏற்​கெனவே உள்ள சட்​டப்​பூர்வ உரிமை​யைச் சிதைக்க ‘பேச்​சு​வார்த்​தை’ என கர்​நாடகா தற்​போது விரித்​துள்ள சதிவலை​யில் முதல்​வர் சிக்​கு​வது ஏன்? தமிழகத்​தின் உரிமை​யைத் தாரை​வார்க்​கும் வித​மாக முதல்​வர் செய்​யும் இந்​தச் செயலைப் பார்த்து டெல்டா விவ​சா​யிகள் கொதித்​துப் போயுள்​ளனர். கர்​நாட​காவை ஆள்​வது காங்​கிரஸ்.

தமிழக அரசிலும் காங்​கிரஸ் பங்கு வகிக்​கிறது. எனவே, கண்​துடைப்​புக்​காக இது​போன்ற பேச்​சு​வார்த்தை நாடகம் ஏற்​பாடு செய்​யப்​பட்​டுள்​ளதா என்ற கேள்​வி​யும் எழுகிறது. தமிழகத்​துக்கு காவிரி நீர் தர கர்​நாடகம் மறுத்​தால் அது நீதி​மன்ற அவம​திப்​பு.

மேகே​தாட்டு அணை கட்ட முயற்​சிப்​பது உச்ச நீதி​மன்ற இறு​தித் தீர்ப்பை மீறு​வ​தாகும். காவிரி போன்ற மாநிலத்​தின் முக்​கிய பிரச்​சினை​களில் அனைத்​துக் கட்​சிகள், விவ​சாய சங்​கங்​களின் ஆலோ​சனை​களைப் பெற்றே செயல்பட வேண்​டும். எனவே, காவிரி உரிமைதொடர்​பாக பேச்​சு​வார்த்​தைக்கு கர்​நாடகம் செல்​லும் தவறான முயற்​சியை முதல்​வர் கைவிட வேண்​டும். இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

விவ​சா​யிகள் சந்​திப்பு: இதற்​கிடையே, தமிழ்​நாடு விவ​சாய சங்​கங்​களின் கூட்​டியக்​கத் தலை​வர் காவேரி தனபாலன் தலை​மை​யில் 40-க்​கும் மேற்​பட்டவிவ​சாய சங்​கங்​களின் நிர்​வாகி​கள், திமுக தலை​வர் மு.க.ஸ்​டாலினை அண்ணா அறி​வால​யத்​தில் நேற்று சந்​தித்​துப் பேசினர்.

அப்​போது, “ஜுன் 12-ம் தேதி திறக்க வேண்​டிய மேட்​டூர் அணைதிறக்​கப்​ப​டாத​தால் குறுவை சாகுபடி பொய்த்​து​விட்​டது. கர்​நாட​கா​விடம் இருந்து காவிரி நீரை பெற்​றுத்தர திமுக குரல் கொடுக்க வேண்​டும்” என வலி​யுறுத்தினர். முன்​னாள் அமைச்​சர் எம்​.ஆர்​.கே.பன்​னீர்​செல்​வம் உள்​ளிட்ட நிர்​வாகிகள் உடனிருந்​தனர்.

SCROLL FOR NEXT