தமிழகம்

விமானத்தில் பெண் பயணிக்கு சிகிச்சை: பெரியகுளம் மருத்துவருக்கு ஸ்ரீலங்கா ஏர்லைன்ஸ் பாராட்டு

செய்திப்பிரிவு

பெரியகுளம்: ​வி​மானத்​தில் உடல்​நலம் பாதித்த இலங்​கைப் பெண்​ணுக்கு சிகிச்சை அளித்து காப்​பாற்​றிய பெரியகுளம் மருத்​து​வர் மூர்த்​திக்கு ஸ்ரீலங்கா ஏர்​லைன்ஸ் நிறு​வனம் அவரைப் பாராட்​டிச்சான்​றிதழ் வழங்​கியது.

தேனி மாவட்​டம் பெரிய குளம் தெற்கு அக்​ரஹாரத்​தைச் சேர்ந்​தவர் மருத்​து​வர் மூர்த்தி (78). இவர் ஆஸ்​திரேலியா நாட்​டில் உள்ள சிட்னி நகரில் தனது மகனை பார்ப்​ப​தற்காக கடந்த 19-ம் தேதி ஸ்ரீலங்கா ஏர்​லைன்ஸ் விமானத்​தில் பயணம் செய்​தார். கொலம்பியா விமான நிலை​யத்​தில் இருந்து சிட்னி நோக்​கிச் சென்ற அந்த விமானத்​தில் இவருடன் பயணித்த இலங்​கை​யைச் சேர்ந்த 74 வயது பெண் திடீரென மயங்​கி​னார்.

உடனே மருத்​து​வர் மூர்த்தி அப்பெண்ணை பரிசோதனை செய்​த​தில் அவருக்​குக் குறைந்த ரத்த அழுத்​தப் பாதிப்பு இருந்​தது தெரிய​வந்​தது. இதைத் தொடர்ந்து அவருக்கு முதலுதவி சிகிச்சை அளித்​தார். சர்க்​கரை அளவைக் கட்​டுப்​படுத்த மாத்​திரை வழங்​கி​னார். சுமார் ஒரு மணி நேரக் கண்​காணிப்​பில் அந்​தப் பெண் இயல்பு நிலை திரும்​பி​னார்.

மருத்​து​வரின் முதல் உதவி மற்​றும் தொடர் சிகிச்​சை​யால் சகபயணி காப்​பாற்​றப்​பட்​டதுக்கு விமானத்​தில் பயணித்​தோர் பலரும் பாராட்​டுத் தெரி​வித்​தனர். மேலும், ஸ்ரீலங்கா ஏர்​லைன்ஸ் நிறு​வனம் மருத்​து​வர் மூர்த்​திக்கு பாராட்​டுச் சான்​றிதழ் வழங்கி கவுர​வித்​தது.

SCROLL FOR NEXT