தமிழகம்

புதிய முதல்​வ​ராக பதவியேற்றுள்ள விஜய்க்கு இலங்கை எதிர்க்கட்சித் தலைவர் வாழ்த்து

செய்திப்பிரிவு

ராமேசுவரம்: தமிழகத்​தின் புதிய முதல்​வ​ராக பதவி​யேற்​றுள்ள ஜோசப் விஜய்க்கு இலங்​கை​யின் எதிர்க்​கட்​சித் தலை​வர் சஜித் பிரேம​தாச வாழ்த்து தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி: தமிழகத்​தின் புதிய அத்​தி​யா​யத்​தைத் தொடங்​கி​யுள்ள முதல்​வர் விஜய்க்கு எனது மனமார்ந்த வாழ்த்​துகள். சமூக நீதி மற்​றும் மதச்​சார்​பின்​மையை அடித்​தள​மாகக் கொண்ட ஒரு புதிய யுகத்தைப் பற்றி பேசினீர்​கள். வெறுப்பு மற்​றும் பழைய காயங்​களின் மீது கட்​டப்​பட்ட சமூகங்​கள் இறு​தி​யில் தனித்து விடப்​படும் என்​ப​தை​யும், அதே நேரத்​தில் நீதி மற்​றும் சகவாழ்​வின் மீது கட்​டப்​பட்ட சமூகங்​களே மக்​கள் உண்​மை​யாக வாழ விரும்​பும் எதிர்​காலத்தை உருவாக்​கும் என்​ப​தை​யும் வரலாறு நமக்​குக் காட்​டி​யுள்​ளது.

உலகம் ஏற்​கெனவே பிரி​வினை​களால் நிறைந்​துள்​ளது. நமது பிராந்​தி​யத்​தில் உள்ள மக்​கள் அனை​வரும் மொழி, மதம் அல்​லது அடை​யாளம் கடந்து உண்​மை​யாக எதிர்​பார்ப்​பது சமூக முன்​னேற்​றம், நீதி மற்​றும் நிலை​யான தன்​மையே ஆகும்.

நம்​மைப் பிரிக்​கும் விஷ​யங்​களை​விட, நம்​மிடையே உள்ள பொது​வான பண்​பு​களும் ஒற்​றுமை​களும் மிக அதி​கம். உங்​களின் இந்​தப் புதிய அத்​தி​யா​யம் முன்​னேற்​றத்​தை​யும், கருணை​யை​யும், கடந்த காலத்​தில் மற்​றவர்​கள் இடைவெளியை உரு​வாக்​கிய இடங்​களில் புரிதலை​யும் ஏற்​படுத்​து​வதற்​கான ஆற்​றலை கொண்டு வரு​மென எதிர்​பார்க்​கிறேன். இவ்​வாறு அவர் குறிப்பிட்டுள்​ளார்.

SCROLL FOR NEXT