கோப்புப் படம்

 
தமிழகம்

நாகை மீனவர் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மீன்பிடி வலைகளையும் வெட்டி கடலில் வீசினர்

செய்திப்பிரிவு

நாகப்பட்டினம்: கடலில் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த நாகை மீனவர்​களை இலங்கை கடற்​படை​யினர் தாக்கி, மீன்​பிடி வலைகளை வெட்டி கடலில் வீசினர்.

நாகை மாவட்​டம் வானவன் மகாதே​வியை சேர்ந்த காளி​முத்து மகன் செல்​வகு​மார் என்​பவருக்கு சொந்​த​மான பைபர் படகில் அவருடன், கதிர்​வேல், ராஜி, முரு​க​பாண்டி ஆகிய மீனவர்​கள் நேற்று முன்​தினம் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்​றனர்.

நேற்று முன்​தினம் இரவு கோடியக்​கரைக்கு தென்​கிழக்கே மீன் பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அங்கு வந்த இலங்கை கடற்​படை​யினர், மீனவர்​களை தாங்​கள் வைத்​திருந்த கம்​பால் தாக்​கியதுடன் மீனவர்​களின் வலைகளை வெட்டி கடலில் வீசி எறிந்​தனர்.இதனால் அதிர்ச்​சி​யடைந்த மீனவர்​கள் நேற்று கரை வந்து சேர்ந்​தனர்.

பின்​னர் அவர்​கள் நாகை அரசு மருத்​து​வக் கல்​லூரி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். இந்த சம்​பவம் குறித்து வேதா​ரண்​யம் கடலோர காவல் குழும போலீ​ஸார் விசா​ரணை செய்து வரு​கின்​றனர்.

SCROLL FOR NEXT