கச்சத்தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா தொடர்பாக யாழ்ப்பாணம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோர்.

 
தமிழகம்

கச்சத்தீவு விழாவில் 8,000 பேர் பங்கேற்க அனுமதி: இலங்கை அரசு அறிவிப்பு

எஸ்.முஹம்மது ராஃபி

ராமேசுவரம்: கச்​சத்​தீ​வில் பிப். 27, 28-ம் தேதி​களில் நடை​பெற உள்ள அந்​தோணி​யார் ஆலயத் திரு​விழா​வில் இலங்​கை, இந்​தி​யா​வைச் சேர்ந்த தலா 4,000 பேர் என மொத்​தம் 8,000 பேர் பங்​கேற்க அனு​மதி அளிக்​கப்பட உள்​ள​தாக இலங்கை அரசு தெரி​வித்​துள்​ளது.

ஒவ்​வோர் ஆண்​டும் கிறிஸ்​தவர்​களின் தவக்​காலத்​தில் கச்சத்தீவு திரு​விழா நடை​பெறு​வது வழக்​கம். இதில் இந்​தி​யா, இலங்​கை​யைச் சேர்ந்​தவர்​கள் கலந்​து​கொள்​வார்​கள். இந்த ஆண்டு கச்​சத்​தீ​வில் உள்ள அந்​தோணி​யார் ஆலயத் திரு​விழா பிப். 27, 28-ம் தேதி​களில் நடை​பெற உள்​ளது.

இந்​நிலை​யில், இலங்கை யாழ்ப்​பாணம் மாவட்ட ஆட்​சி​யர் அலுவல​கத்​தில் கச்சத்தீவு புனித அந்​தோணி​யார் திரு​விழா ஏற்​பாடு​கள் குறித்த ஆலோ​சனைக் கூட்​டம் நேற்று நடை​பெற்​றது.

மாவட்ட ஆட்​சி​யர் மருதலிங்​கம் பிரதீபன் தலை​மை​யில் நடை​பெற்ற இந்​தக் கூட்​டத்​தில், யாழ்ப்​பாணம் மறை மாவட்ட முதன்மை குரு ஜோசப்​தாஸ் ஜெபரத்​தினம் மற்​றும் இந்​திய துணைத் தூதரக அதி​காரி​கள், இலங்கை கடற்​படை மற்​றும் காவல் துறை அதி​காரி​கள் உள்​ளிட்​டோர் கலந்​து​கொணடனர்.

பிப். 27-ம் தேதி மாலை 4 மணி​யள​வில் கச்​சத்​தீ​வில் கொடியேற்​றத்​துடன் திரு​விழா தொடங்​கி, ஜெப​மாலை, இரு​நாட்டு மக்​களும் சேர்ந்து தூக்கி வரும் சிலு​வைப் பாதை நிகழ்ச்​சி, நற்​கருணை ஆராதனை, இரவு அந்​தோணி​யாரின் சொரூபம் வைக்​கப்​பட்ட தேர் பவனி நடை​பெறுகிறது.

கூட்டுப் பிரார்த்தனை... பிப். 28-ம் தேதி காலை 7.30 மணி​யள​வில் சிறப்​புத் திருப்​பலி பூஜை​யும், கூட்​டுப் பிரார்த்​தனை​யும் நடை​பெறும். தொடர்ந்து கொடி​யிறக்​கம் நடை​பெற்று விழா நிறைவடை​யும். இந்த விழா​வில், இலங்​கை, இந்​தி​யா​வைச் சேர்ந்த தலா 4,000 பேர் என மொத்​தம் 8,000 பேர் கலந்து கொள்​வதற்கு அனு​மதி வழங்​கப்​படும் என்று இந்​தக் கூட்​டத்​தில் அறிவிக்​கப்​பட்​டது.

SCROLL FOR NEXT