தமிழகம்

தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ரூ.6.52 லட்சம் அபராதம்: இலங்கை நீதிமன்றம் உத்தரவு

எம்.முகம்மது ராஃபி

ராமேசுவரம்: தமிழக மீனவர்கள் 9 பேருக்கு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் அபராதம் விதித்து இலங்கையின் மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆகஸ்ட் 12 அன்று கடலுக்குச் சென்ற வெலிங்டன் என்பவருக்குச் சொந்தமான விசைப்படகை எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் பேரில் இலங்கை கடற்படையினர் கைப்பற்றினர்.

படகிலிருந்த ஆரோக்கிய ஜனதன், அந்தோணி பிச்சை , டான்போஸ்கோ, பிரபு, ஆரோக்கியடெவின், வேலுச்சாமி, சுப்பையா, ஆரோக்கிய ஜெனிஸ்டன், ஸ்டெவின் ஆகிய 9 மீனவர்கள் கைது செய்யப்பட்டு, தலைமன்னார் கடற்படை முகாமுக்கு கொண்டு சென்று மன்னார் மீன்வளத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

பின்னர் சிறைப் பிடிக்கப்பட்ட 9 மீனவர்கள் மீதும் எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வவுனியா சிறையில் அடைக்கப்பட்டனர். மீனவர்களின் காவல் இன்று நிறைவடைந்ததை தொடர்ந்து 9 மீனவர்களும் மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கை விசாரித்த ஊர்காவல் துறை நீதிபதி, 9 மீனவர்களுக்கு தலா இலங்கை ரூபாய் 2 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 11 மீனவர்களுக்கும் மொத்த அபராதம் இலங்கை ரூ.22 லட்சம் லட்சத்து 50 ஆயிரம் ஆகும். இதன் இந்திய மதிப்பு ரூ.6 லட்சத்து 52 ஆயிரம் ஆகும்.

அபராத தொகையை மீனவர்கள் கட்ட தவறும் பட்சத்தில் ஆறு மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அபராதம் விதிக்கப்பட்டுள்ள 11 மீனவர்கள் அபராதத் தொகையை செலுத்தியதும் விடுதலை செய்யப்படுவார்கள்.

SCROLL FOR NEXT