தமிழகம்

சபரிமலை ஐயப்ப பக்தர்கள் வசதிக்காக சென்னை - கொல்லம் இடையே நவ.16 முதல் சிறப்பு ரயில்கள்

செய்திப்பிரிவு

சென்னை: சபரிமலை செல்​லும் ஐயப்ப பக்​தர்​களின் வசதிக்​காக சென்னை - கொல்​லம் இடையே நவ.16-ம் தேதி முதல் ஜனவரி மாதம் வரை சிறப்பு ரயில்​கள் இயக்​கப்​படு​கின்​றன.

இது​குறித்து தெற்கு ரயில்வே வெளி​யிட்ட அறிக்கை: சென்னை எழும்​பூரில் இருந்து நவ.19 முதல் ஜன.21 வரை வியாழன்​தோறும் இரவு 11.40 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06117) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்​லம் செல்​லும். மறுமார்க்​கத்​தில் (06118) கொல்​லத்​தில் இருந்து நவ.20 முதல் ஜன.22 வரை வெள்​ளிதோறும் மாலை 6.45 மணிக்கு புறப்​பட்டு மறுநாள் மதி​யம் 12.30 மணிக்கு சென்னை எழும்​பூர் வரும்.

இதேபோல, எழும்​பூரில் இருந்து நவ.21 முதல் ஜன.23 வரை சனிதோறும் இரவு 11.40 மணிக்கு இயக்​கப்​படும் சிறப்பு ரயில் (06121) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்​லம் செல்​லும். மறுமார்க்​கத்​தில் (06122) கொல்​லத்​தில் இருந்து நவ.22 முதல் ஜன.24 வரை ஞாயிறுதோறும் மாலை 6.45 மணிக்கு புறப்​பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்​ரல் வரும்.

சென்னை சென்ட்​ரலில் இருந்து நவ.18 முதல் ஜன.20 வரை புதன்​தோறும் மதி​யம் 3.10 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06119) மறுநாள் காலை 7.20 மணிக்கு கொல்​லம் செல்​லும். மறுமார்க்​கத்​தில் (06120) கொல்​லத்​தில் இருந்து நவ.19 முதல் ஜன.21 வரை வியாழன்​தோறும் காலை 10.40 மணிக்கு புறப்​பட்டு மறுநாள் அதி​காலை 3.30 மணிக்கு சென்னை சென்ட்​ரல் வரும்.

சென்ட்​ரலில் இருந்து நவ.16 முதல் ஜன.25 வரை திங்​கள்​தோறும் இரவு 11.50 மணிக்கு புறப்​படும் சிறப்பு ரயில் (06083) மறுநாள் மாலை 4.30 மணிக்கு கொல்​லம் செல்​லும்.

மறுமார்க்​கத்​தில் (06084) கொல்​லத்​தில் இருந்து நவ.17 முதல் ஜன.26 வரை செவ்​வாய்​தோறும் மாலை 6.45 மணிக்கு புறப்​பட்டு மறுநாள் காலை 11.40 மணிக்கு சென்னை சென்ட்​ரல் வரும். இந்த சிறப்பு ரயில்​கள் பெரம்​பூர், திரு​வள்​ளூர், காட்​பாடி, சேலம், ஈரோடு, திருப்​பூர், போத்​தனூர் பாலக்​காடு, எர்​ணாகுளம் வழி​யாக இயக்​கப்​படு​கிறது. இதற்​கான முன்​ப​திவு இன்று (நவ.7) காலை 8 மணிக்கு தொடங்​கு​கிறது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT