தமிழகம்

12-வது தேசிய கைத்தறி நாள் விழா: கலைவாணர் அரங்கில் சிறப்புக் கண்காட்சி - முதல்வர் விஜய் பங்கேற்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழக அரசால் சென்னை கலை​வாணர் அரங்​கில் ஏற்​படுத்​தப்​பட்​டுள்ள கைத்​தறிக் கண்​காட்​சியை முதல்​வர் விஜய் நேற்று தொடங்கி வைத்​தார் தமிழக கைத்​தறித் துறை சார்​பில் 12-வது தேசிய கைத்​தறி நாள் விழா கண்​காட்சி சென்னை கலை​வாணர் அரங்​கத்​தில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராக பங்​கேற்ற முதல்​வர் விஜய், கைத்​தறிக் கண்​காட்​சி-2026, கோஆப்​டெக்ஸ் நிறு​வனத்​தின் ‘வெற்​றித் தறி’ விற்​பனையகத்தை தொடங்கி வைத்​தார்.

மேலும், 2025–26-ம் ஆண்​டுக்​கான மாநில அளவில் சிறந்த நெச​வாளர் மற்​றும் வடிவ​மைப்​பாளர் விருதுகளுக்​குத் தேர்​வான 11 பேருக்கு ரூ.22.25 லட்​சத்​துக்​கான காசோலைகள் மற்​றும் பாராட்​டுச் சான்​றிதழ்​களை​யும் அவர் வழங்​கி​னார்.

தற்​போது முதல்​வ​ரால் தொடங்​கப்​பட்ட கைத்தறிக் கண்​காட்சி ஆகஸ்ட் 13-ம் தேதி வரை 7 நாட்​கள் நடை​பெறவுள்ளது. இதில் தமிழகத்​தி​லுள்ள கைத்​தறி நெச​வாளர் கூட்​டுறவுச் சங்​கங்​கள் உற்​பத்தி செய்​யும் காஞ்​சிபுரம், ஆரணி மற்​றும் திரு​புவனம் பட்​டுச் சேலைகள், கோவை கோரா பருத்​திச் சேலைகள், நெகமம் பருத்​திச் சேலைகள், சேலம் வெண்​பட்டு வேட்​டிகள், வீட்டு உபயோக ஜவுளி வகைகள் உட்பட பல்​வேறு கைத்​தறித் தயாரிப்​பு​களு​டன், பிற மாநிலங்​களின் தந்​துஜா, மிருக்​ணா​யினி, குஜ்ஜாரி, பயோனிகா போன்ற புகழ்​பெற்ற கைத்​தறித் தயாரிப்​பு​களும் விற்​பனைக்​காக காட்​சிப்​படுத்​தப்​பட்​டுள்​ளன.

இதுத​விர நெச​வாளர்​களின் தயாரிப்​பு​களைச் சந்​தைப்​படுத்​தும் நோக்​கில் தேசிய ஆடை வடிவ​மைப்பு நிறு​வனம்​(நிப்ட்) உதவி​யுடன் கோ-ஆப்​டெக்ஸ் சார்​பில் ‘வெற்​றித் தறி’ விற்​பனையக​மும் அமைக்​கப்​பட்​டுள்​ளது.

இந்​நிகழ்ச்​சி​யில் அமைச்​சர்​கள் ப.வெங்​கடரமணன், ம.விஜய் பாலாஜி, ஜெகதீஸ்​வரி, சீ.ரமேஷ், பெ.மதன் ராஜா, ஸ்ரீநாத் மற்​றும் துறை​சார்ந்​த அலு​வலர்​கள்​ கலந்​துகொண்​டனர்​.

SCROLL FOR NEXT