கோப்புப் படம்

 
தமிழகம்

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகம் முழுவதும் இன்று, நாளை சிறப்பு முகாம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம் முழு​வதும் வாக்காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க இன்​றும், நாளை​யும் சிறப்பு முகாம் நடை​பெறுகிறது.

தமிழகத்​தில் கடந்த நவ.4 முதல் டிச.14-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த (எஸ்​ஐஆர்) பணி​கள் நடை​பெற்​றன. அதன்​பின், கடந்த டிச.19-ம் தேதி அனைத்து மாவட்​டங்​களி​லும், தொகுதி வாரி​யாக வரைவு வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்​பட்​டது. அதன்​படி, தமிழகத்​தில் தற்​போது 5.43 கோடி வாக்​காளர்​கள் உள்​ளனர். பட்​டியலில் இருந்து 97.37 லட்​சம் பேர் நீக்​கப்​பட்​டனர். இதில் இறந்​தவர்​கள் மட்​டும் 26.94 லட்​சம் பேர். முகவரி​யில் இல்​லாதவர்​கள் என 66.44 லட்​சம் பேரின் பெயர்​கள் நீக்​கப்​பட்​டுள்​ளன.

இந்​நிலை​யில் டிச.19 முதல் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. தகு​தி​யானவர்​கள் வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க விண்​ணப்​பித்து வரு​கின்​றனர். நிரந்​தர​மாக இடம்​பெயர்ந்​த​தாக, வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​பட்ட 66.44 லட்​சம் பேரும், தங்​கள் பெயர்​களை சேர்க்க விண்​ணப்​பிக்க வேண்​டி​யுள்​ளது. அதனால் பொது​மக்​கள் வசதிக்​காக விடு​முறை நாட்​களான கடந்த டிச.27, 28-ம் தேதி​களில் தமிழகம் முழு​வதும் 75,000 வாக்​குச் சாவடிகளி​லும் சிறப்பு முகாம்​கள் நடை​பெற்​றன.

இதில் 27-ம் தேதி 2.56 லட்​சம் பேரும், 28-ம் தேதி 2.86 லட்​சம் பேர் என மொத்​தம் 5.43 லட்​சம் பேர் விண்​ணப்​பித்​துள்​ளனர். இது​வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க 7.37 லட்​சம் பேர், 9,535 பேர் பெயர் நீக்​கம் கோரி விண்​ணப்​பித்​துள்​ளனர். இதையடுத்து இன்​றும் (ஜன.3), நாளை​யும் தமிழகம் முழு​வதும் அனைத்து வாக்​குச் சாவடிகளி​லும் சிறப்பு முகாம்​கள் நடை​பெறுகின்​றன.

ஜனவரி 1-ம் தேதி​யுடன் 18 வயது பூர்த்தி அடைந்​தவர்​கள் மற்​றும் எஸ்​ஐஆர் பணி​யில் வாக்​காளர் பட்​டியலில் இருந்து பெயர் நீக்​கப்​பட்​ட​வர்​கள் படிவம் 6-ஐ வழங்க வேண்​டும். அத்​துடன் உறு​தி​மொழி படிவத்​தை​யும் வழங்க வேண்​டும். அதில் எஸ்​ஐஆர் படிவத்​தில் உள்​ளதை போன்​றே, தங்​களது அல்​லது தங்​கள் பெற்​றோரின், 2002, 2005 கால​கட்ட வாக்​காளர் பட்​டியலில் உள்ள விவரங்​களை குறிப்​பிட வேண்​டும். வாக்​காளர் பட்​டியலில் உள்ள பெயர்​களை நீக்க படிவம் 7, ஒரே தொகு​தி​யில் முகவரி மாற்​றம், பெயர் உள்​ளிட்​ட​வற்​றில் உள்ள பிழைகள் திருத்​தம், வேறு மாவட்​டம் மாறி இருந்​தா​லும் படிவம் 8-ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்​டும்.

இந்​நிலை​யில், ஏற்​கெனவே இப்​பணி​யில் ஈடு​பட்​டுள்ள அதி​காரி​களுக்கு பணி சுமை ஏற்​படு​வதை தடுக்க 234 தொகு​தி​களுக்​கும் கூடு​தலாக உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். அதன்​படி சிறப்பு வட்​டாட்​சி​யர்​கள், வட்​டார வளர்ச்சி அலு​வலர்​கள், பேரூ​ராட்சி செயல் அலு​வலர்​கள் உள்​ளிட்​டோர் உதவி வாக்​காளர் பதிவு அலு​வலர்​களாக நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். ஜன.18-ம் தேதி வரை வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க, திருத்த விண்​ணப்​பிக்​கலாம். பிப்​.17-ம் தேதி இறுதி வாக்​காளர் பட்​டியல் வெளி​யிடப்பட உள்​ளது.

வாக்காளர்கள் விசாரணைக்கு அழைப்பு: எஸ்ஐஆர் படிவத்தை முறையாக பூர்த்தி செய்யாத 12 லட்சம் பேருக்கு மாவட்டதேர்தல் அதிகாரிகள் சார்பில் கடிதம் அனுப்பி விசாரணைக்கு அழைக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, பெற்றோரின் 2002 காலகட்ட விவரங்களை பூர்த்தி செய்திருக்கும் இளம் வாக்காளர்களும் அதிக எண்ணிக்கையில் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். ஏற்கெனவே வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று, எஸ்ஐஆர் படிவமும் முறையாக பூர்த்தி செய்து படிவம் அளித்தவர்களையும் ரேண்டம் செக் அப் எனக் கூறி வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் (பிஎல்ஓ) விசாரணைக்கு அழைப்பதாகவும், தங்களை குடிமகன் என்று நிரூபிக்க சான்று, பெற்றோரின் ஆவணங்களை கொண்டு வர அறிவுறுத்தியுள்ளனர். இதனால் வாக்காளர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.

இதுதொடர்பாக தலைமை தேர்தல்அதிகாரி அலுவலகத்தில் கேட்டபோது,“படிவங்களை தமிழில் எழுதி கொடுத்திருந்தால், அதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும்போது, தானியங்கி மொழி மாற்றத்தில் பிழைகள் இருந்தால், அவர்களை அழைத்து சரி செய்யப்படுகிறது. மற்றபடி வாக்காளர்களை அழைத்து தொந்தரவு செய்வதில்லை” என்றனர்.

SCROLL FOR NEXT