தமிழகம்

எஸ்.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்கக் கூடாது: பேரவை தலைவரிடம் பழனிசாமி கோரிக்கை

செய்திப்பிரிவு

சென்னை: தன்னை சட்​டப்​பேரவை அதிமுக தலை​வ​ராக அறிவிக்கக்​கோரி முன்​னாள் அமைச்​சர் எஸ்​.பி.வேலுமணி அளித்த கடிதத்தை ஏற்​கக் கூடாது என்று பேர​வைத் தலை​வரிடம் அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

அதி​முக பொதுச்​செய​லா​ளர் பழனி​சாமி, தனது ஆதரவாளர்களுடன், தலை​மைச் செயல​கத்​தில் பேர​வைத் தலைவர் ஜேசிடி பிர​பாகரனை நேற்று சந்​தித்​தார். அப்​போது, பல்​வேறு நீதி​மன்ற தீர்ப்​பு​களை மேற்​கோள்காட்டி விளக்​கி, தன்​னைத்​தான் பேரவை அதி​முக தலை​வ​ராக நியமிக்க வேண்​டும் என்​றும், எஸ்​.பி.வேலுமணி அளித்த கடித்தை ஏற்​கக்​கூ​டாது என்​றும் கோரிக்கை விடுத்​தார்.

அதைத் தொடர்ந்து பழனி​சாமி அணியைச் சேர்ந்த முன்​னாள் அமைச்​சர் ஓ.எஸ்​.மணி​யன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: தமிழகத்​தில் 4 ஆண்​டு​கால சிறப்​பான ஆட்​சியை நடத்தி மக்​களின் பாராட்டை பெற்​றவர் பழனிசாமி. தேர்​தலில் தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் 1.35 கோடி வாக்​கு​களை பெற்​று, கூட்​ட​ணி​யுடன் 53 இடங்​கள், தனித்து 47 இடங்​களை பழனிசாமி வென்று கொடுத்​தார்.

இந்​நிலை​யில், சி.​வி.சண்​முகம் அவதூறான தகவலை தெரி​வித்​துள்​ளார். பழனி​சாமி​தான் சட்​டப்​பேரவை அதி​முக தலை​வர் என 47 பேர் கையெழுத்​திட்டு உள்​ளனர் அந்த கடிதத்தை பேரவைத் தலை​வரிடம் ஒப்​படைத்​திருக்​கிறோம். எம்​எல்​ஏக்​கள் கூட்​டத்தை கூட்​டும் அதிகாரம் கட்​சியின் பொதுச் செய​லா​ள​ருக்கு மட்​டும்தான் உண்​டு. வேறு யாருக்​கும் கிடை​யாது. இவ்​வாறு அவர் கூறி​னார்.

முன்​னாள் அமைச்​சர் அக்ரி கிருஷ்ண​மூர்த்தி கூறும்​போது, “அதி​முக பொதுச்​செய​லா​ளர் ஆணைக்​கிணங்க, பேர​வை​யில் நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​துக்கு எதி​ராக அதி​முக வாக்களிக்​கும். அது தொடர்​பாக அனைத்து அதி​முக எம்​எல்​ஏக்​களுக்​கும் தகவல் அனுப்​பப்​பட்​டுள்​ளது. இந்த உத்​தரவை மீறி வாக்​களிப்​பவர்​கள் மீது சட்டரீதி​யாக நடவடிக்கை எடுக்​கப்​படும்" என்​றார்.

SCROLL FOR NEXT