தமிழகம்

அந்தமான், நிகோபார் தீவுகளில் தென்மேற்கு பருவமழை விரைவில் தொடங்கும்

18-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: அந்​த​மான், நிகோ​பார் தீவு​களில் தென்​மேற்​குப் பருவமழை விரை​வில் தொடங்க வாய்ப்​புள்​ளது.

இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பில் கூறி​யிருப்​ப​தாவது: தெற்கு வங்​கக்​கடல் பகுதிகள், அந்​த​மான் கடல் பகு​தி​கள், அந்​த​மான் மற்​றும் நிகோபார் தீவு​களில் தென்​மேற்​குப் பரு​வ​மழை, இந்த வார இறுதியில் தொடங்க வாய்ப்​புள்​ளது. வடக்கு இலங்கை கடலோரப் பகு​தி​களுக்கு அப்​பால் உள்ள தென்​மேற்கு வங்​கக்​கடல் பகுதிகளில் நில​விய காற்​றழுத்த தாழ்​வுப் பகுதி தென்​மேற்கு வங்கக்​கடல் பகு​தி​களில் நில​வு​கிறது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்​பெறக் கூடும்.

இதன் காரண​மாக, இன்று (மே 13) மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள், கடலோர தமிழகத்​தி​லும், 14-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென் தமிழகத்​தி​லும், 15-ம் தேதி தமிழகத்​தில் ஓரிரு இடங்​களி​லும் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

16-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் தென் தமிழகத்​தி​லும், 17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​களி​லும், 18-ம் தேதி, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்​டங்​கள் மற்​றும் அதனை ஒட்​டிய மாவட்​டங்​களி​லும் ஓரிரு இடங்​களில் மித​மான மழை பெய்​யக்​கூடும்.

தமிழகத்​தில் 14, 15-ம் தேதி​களில் தஞ்​சாவூர், திரு​வாரூர், நாகப்​பட்​டினம், மயி​லாடு​துறை, புதுக்​கோட்டை ஆகிய டெல்டா மாவட்​டங்​கள் மற்​றும் காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னலுடன் கனமழை பெய்​யக்​கூடும்.

சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் இன்று வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். நகரின் ஒருசில பகு​தி​களில் லேசான மழை பெய்ய வாய்ப்​புள்​ளது.

சூறாவளிக் ​காற்று: இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​குடா மற்​றும் குமரிக்​கடல் பகு​தி​களில் மணிக்கு 40 முதல் 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக்​ காற்று வீசக்​கூடும்.

தமிழகத்​தில் நேற்று காலை 8.30 மணி​யுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்​தில் அதி​கபட்​ச​மாக கோவை மாவட்​டம் ஆழி​யாரில் 5 செ.மீ, ராம​நாத​புரம் மாவட்​டம் பாம்​பன், கோவை மாவட்​டம் பெள்​ளா​தி​யில் தலா 4 செ.மீ, கோவை மாவட்​டம் உபாசி, ஒத்​தக்​கால் மண்​டபம், கோட்​டூரில் தலா 2 செ.மீ மழை பதி​வாகி​யுள்​ளது. இவ்​வாறு வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT