தமிழகம்

தமிழகம், கேரளாவில் தென்மேற்குப் பருவமழை 3 நாளில் தொடங்கும்

16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகம், கேரளா​வில் தென்​மேற்​குப் பரு​வ​மழை 3 நாட்​களில் தொடங்​கக்​கூடும். இதுதொடர்​பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளி​யிட்ட செய்​திக்​குறிப்​பு: தென்​மேற்​குப் பரு​வ​மழை அடுத்த 3 நாட்​களில் அரபிக்​கடல், வங்​கக்​கடல், லட்​சத்​தீவு​கள், கேரளா, தமிழகத்​தின் சில பகு​தி​களுக்கு முன்​னேறும் வகை​யில் நிலைமை சாதக​மாக உள்​ளது. அதனால், தமிழகம், கேரளா​வில் தென்​மேற்​குப் பரு​வ​மழை அடுத்த 3 நாட்​களில் தொடங்க வாய்ப்பு உள்​ளது.

தென்​கிழக்கு அரபிக்​கடல், அதை ஒட்​டிய தெற்கு கேரளப் பகு​தி​களின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சி நில​வு​கிறது. இதன் காரண​மாக, தமிழகத்​தில் ஒருசில இடங்​களில் இன்று (ஜூன் 1) முதல் 6-ம் தேதி வரை இடி, மின்​னலுடன் லேசானது முதல் மித​மான மழை பெய்​யக்​கூடும். குறி்ப்​பாக, இன்று நீல​கிரி, கோவை, திருப்​பூர், திண்​டுக்​கல், தேனி, கரூர், நாமக்​கல், ஈரோடு, சேலம், திருச்​சி, தரு​மபுரி, கிருஷ்ணகிரி, திருப்​பத்​தூர், வேலூர், ராணிப்​பேட்​டை, திரு​வண்​ணா​மலை மாவட்​டங்​களில் ஓரிரு இடங்​களில் இடி, மின்​னல், பலத்த காற்​றுடன் கனமழை பெய்ய வாய்ப்புள்​ளது.

தமிழகம், புதுச்​சேரி, காரைக்​கால் பகு​தி​களில் ஓரிரு இடங்​களில் இன்று அதி​கபட்ச வெப்​பநிலை வழக்​கத்​தை​விட 5 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை அதி​கரிக்​கக்​கூடும். சென்னை மற்​றும் புறநகர் பகு​தி​களில் வானம் ஓரளவு மேகமூட்​டத்​துடன் காணப்​படும். ஓரிரு பகு​தி​களில் இடி, மின்​னலுடன் லேசான மழை பெய்யும்.

வெப்​பநிலை 86 டிகிரி முதல் 104 டிகிரி ஃபாரன்​ஹீட் வரை இருக்​கக்​கூடும். தமிழக கடலோரப் பகு​தி​கள், மன்​னார் வளை​கு​டா, குமரிக்​கடல் பகு​தி​களில் இன்று முதல் 4-ம் தேதி வரை மணிக்கு 60 கி.மீ. வேகத்​தில் சூறாவளிக் காற்று வீசக்​கூடும். இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT