பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையாவின் உடலுக்கு அரசு சார்பில் அஞ்சலி செலுத்திய அமைச்சர்கள் நிர்மல் குமார், விஸ்வநாதன், மதார் பதுருதீன் எம்எல்ஏ, மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா ஆகியோர். படம். நா.தங்கரத்தினம்

 
தமிழகம்

கவுரவ அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்

அரசியல் கட்சியினர், தமிழ் அறிஞர்கள், பொதுமக்கள் அஞ்சலி

செய்திப்பிரிவு

மதுரை: தமிழறிஞரும், பட்​டிமன்ற நடு​வரு​மான சாலமன் பாப்​பை​யா​வின் உடல், மதுரை தத்​தனேரி மின் மயானத்​தில் நேற்று கவுரவ அரசு மரி​யாதை​யுடன் தகனம் செய்​யப்​பட்​டது.

மதுரை அரசரடி ஞானஒளிவுபுரத்​தைச் சேர்ந்த மில் தொழிலாளி சுந்​தரத்​தின் மகனாக 1936-ம் ஆண்டு பிப்​.22-ம் தேதி பிறந்​தவர் சாலமன் பாப்​பை​யா. இவர், உடல்​நலக் குறைவால் தனது 90-வது வயதில் நேற்று முன்​தினம் காலமா​னார்.

மதம், சாதி,பொருளா​தார வேறு​பாடு​களைக் கடந்து அனை​வரை​யும் ஒன்​றாக பார்க்க வேண்​டும் என்ற கருத்தை தொடர்ந்து வலி​யுறுத்தி வந்​தவர் பாப்​பை​யா. பேராசிரிய​ராக மாணவர்​களின் முன்​னேற்​றத்​துக்​கும், தமிழ் மேடை பேச்​சுகள், பட்​டிமன்​றங்​கள் வாயி​லாக தமிழ் மொழிக்​கும், சமூகத்​துக்​கும் தனது வாழ்​நாள் முழு​வதும் சேவை​களை செய்​துள்​ளார்.

அவரது உடல் நேற்று பொது​மக்​கள் அஞ்​சலிக்​காக அவரது வீட்​டில் வைக்​கப்​பட்​டிருந்​தது. தமிழ் அறிஞர்​கள், பட்​டிமன்​றப் பேச்​சாளர்​கள், அரசி​யல் தலை​வர்​கள், உறவினர்​கள் உள்ளிட்ட பொதுமக்கள் அஞ்​சலி செலுத்​தினர். பின்னர் உவெப் நினைவு தேவால​யத்​தில் அவருக்கு நேற்று காலை இறுதி பிரார்த்​தனை நடை​பெற்​றது. அங்கு முன்​னாள் அமைச்​சர்​கள் தங்​கம் தென்​னரசு, பழனிவேல் தியாக​ராஜன், துணை மேயர் நாக​ராஜன் திமுக கவுன்​சிலர் ஜெய​ராம், ஆகியோர் அஞ்​சலி செலுத்​தினர்.

பின்​னர் அவரது உடல் இறுதி ஊர்​வல​மாக தத்​தனேரி மின் மயானத்​துக்கு கொண்டு வரப்​பட்​டது. வழிநெடு​கிலும் பொது​மக்​கள் திரண்டு இறுதி அஞ்சலி செலுத்​தினர். மயானத்​தில் அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், விஸ்​வ​நாதன், மாவட்ட ஆட்​சி​யர் நிஷாந்த் கிருஷ்ணா, காவல் ஆணை​யர் ராஜேந்​திரன், எம்​எல்ஏ மதார் பதுருதீன் ஆகியோர் முன்​னிலை​யில் காவல் துறை​யினரின் அணிவகுப்பு மரி​யாதை எனப்​படும் கவுரவ அரசு மரி​யாதை (துப்​பாக்கி குண்​டு​கள் முழக்​கம் இல்​லாமல்) செலுத்​தப்​பட்​டது. பின்​னர் அவரது உடல் தகனம் நடை​பெற்​றது.

பட்​டிமன்​றப் பேச்​சாளர்​கள் ராஜா, பாரதி பாஸ்​கர், பட்​டிமன்ற நடு​வர் லியோனி உள்​ளிட்ட ஏராள​மானோர் பங்​கேற்​றனர். திண்​டுக்​கல் லியோனி கூறும்​போது “தமிழறிஞர் சாலமன் பாப்​பை​யா​வுக்கு அரசு மரி​யாதை வழங்​கிய தமிழக முதல்​வர் விஜய்க்​கும், அமைச்​சர்​கள் நிர்​மல்​கு​மார், ராஜ்மோகன் ஆகியோ​ருக்​கும் தமிழ் அறிஞர்​கள், பேச்​சாளர்​கள் உள்​ளிட்​டோர் சார்​பாக நன்றி தெரி​வித்​துக் கொள்​கிறேன்’’ என்​றார்​.

SCROLL FOR NEXT