முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் சாலமன் பாப்பையா பத்மஸ்ரீ விருது பெற்றபோது...

 
தமிழகம்

“சாலமன் பாப்​பையா பல துறைகளில் சாதனை படைத்தவர்” - கு.ஞானசம்பந்தன் புகழஞ்சலி

செய்திப்பிரிவு

சாலமன் பாப்​பையா பல துறை​களில் சாதனை படைத்​தவர் என்று பேராசிரியர் கு.​ஞானசம்​பந்​தன் தெரி​வித்​தார்.

அவர் கூறும்​போது, “பே​ராசிரியர் சாலமன் பாப்​பையா மறைவு தாங்க முடி​யாத துயரத்தை தமிழ் சமு​தா​யத்​துக்கு கொடுத்​திருக்​கிறது. சாலமன் பாப்​பையா மேடை​யில் பேசும்​போது என் தந்​தை​யாருடன் சிறு பைய​னாக தரை​யில் அமர்ந்து கேட்​டிருக்​கிறேன். நடு​வ​ராக பல மேடைகளில் பார்த்​திருக்​கிறேன்.

அமெரிக்​கன் கல்​லூரி​யில் ஒரு​முறை அனைத்து கல்​லூரி​களுக்​கான பேச்​சுப்​போட்டி நடந்​தது. அந்த போட்​டி​யில் நான் அவரிடம் 2-ம் பரிசு பெற்​றேன். பிறகு அவரது பட்​டிமன்​றத்​திலேயே பேசி​யிருக்​கிறேன்.

ஒரு​முறை மதுரை தமிழ்ச்​சங்​கத்​தில் கமலாம்​பாள் சரித்​திரம் பற்றி தனிச் சொற்​பொழி​வாற்​றி​னார். அதில் வரும் தமிழாசிரிய​ரான ஆடு​சாபட்டிஅம்​மையப்ப பிள்​ளையை பற்றி பேசும்போது, நான் வியந்​து​போனேன். 2003-ம் ஆண்டு அமெரிக்க தமிழ்ச் சங்கக் கூட்​டமைப்​பான ‘பெட்​னா’ அவரை அமெரிக்காவுக்கு அழைத்​து​போது, நானும் சென்​றிருக்​கிறேன்.

அவர் பேச்​சாளர் மட்​டுமல்ல, எழுத்​தாள​ரும் கூட. அவர் பட்​டுக்​கோட்டை கல்​யாண சுந்தரத்​தின் வாழ்க்கை வரலாற்றை எழு​தி​யிருக்​கிறார். அதில் அட்​டைப் படத்​துக்கு அவரே ஓவிய​மாக வரைந்​திருக்​கிறார். திருக்​குறளுக்கு உரை எழுதி இருக்​கிறார். புற​நானூறுக்கு உரை எழுதி​யிருக்​கிறார். பலதுறைகளி​லும் சாதனை படைத்​திருக்கிறார். மதுரை கம்​பன் கழகத்தை தோற்​று​வித்​த வரும் அவர் தான். அவருக்கு அரசு மரி​யாதை செய்​தால் அது தமிழுக்கே செய்த பெரு​மை​யாகும்​” என்​றார்​.

SCROLL FOR NEXT