தமிழகம்

புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் புதிதாக 6 வேட்பு மனுக்கள் தாக்கல்

செ.ஞானபிரகாஷ்

புதுச்சேரி: முக்கிய கூட்டணிகளில் தொகுதி பங்கீடு முடியாததால் புதுச்சேரி, காரைக்கால், ஏனாமில் வேட்பு மனு தாக்கல் மந்தமாகவே உள்ளது. இன்று புதிதாக 6 மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். இதுவரை தாக்கல் செய்தோர் எண்ணிக்கை 18 ஆனது.

புதுச்சேரியில் கடந்த 16-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கி, முதல் இரு நாட்களுக்கு வேட்பு மனுதாக்கல் யாரும் செய்யவில்லை. புதுச்சேரியில் நல்ல நாள் பார்த்துதான் பலரும் மனுதாக்கல் செய்வது வழக்கம். அமாவாசை நாளான புதன்கிழமை 12 பேர் மனுதாக்கல் செய்தனர்.

          

இன்று காரைக்கால் திருநள்ளாறு தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், மாற்று வேட்பாளராக அசோக் ஆனந்தன், ஏனாம் எம்எல்ஏ கொல்லப்பள்ளி சீனிவாச அசோக் இரு மனுக்களும், முதலியார்பேட்டை தொகுதியில் திமுக சார்பில் திருவேங்கடம், சுயேச்சை முத்துமணிகண்டன் ஆகியோர் ஆறு மனுக்கள் தாக்கல் செய்தனர். இதையடுத்து 18 மனுக்கள் தாக்கலாகி உள்ளன.

நாளை மற்றும் திங்கள்கிழமை மட்டுமே இன்னும் வேட்பு மனு தாக்கல் செய்யவேண்டிய சூழல் உள்ளது. நடுவே சனிக்கிழமை ரம்ஜான் விடுமுறை தினம், ஞாயிறு அன்று விடுமுறை தினம் . அதனால் நாளையும், திங்கள்கிழமையும் அதிகமானோர் மனு தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

SCROLL FOR NEXT