சென்​னை​யில் நடந்த பட்​டமளிப்பு விழா​வில் செவிலிய மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை வழங்கி உரையாற்றிய அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன்

 
தமிழகம்

புதிதாக 6 அரசு செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் 6 புதிய அரசு செவிலியர் கல்​லூரி​கள் அமைக்​கப்​படும் என்று அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் நேற்று நடந்தபட்​டமளிப்பு விழா​வில் செவிலிய மாணவ, மாணவி​களுக்கு பட்​டங்​களை அமைச்​சர் மா.சுப்​பிரமணி​யன் வழங்​கி​னார். பின்​னர் செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறியது: இந்த அரசு பொறுப்​பேற்ற பிறகு 8,834 ஒப்​பந்த செவிலியர்​களுக்கு பணிநிரந்தர ஆணை​கள்வழங்​கப்​பட்​டுள்​ளன.

          

அதே​போல் 3,009 ஒப்​பந்த செவிலியர்​களுக்கு பணி நியமன ஆணை​கள்வழங்​கப்​பட்​டுள்​ளன. கரோனா காலத்​தில் தற்​காலிக​மாக பணிநியமிக்கப்​பட்ட செவிலியர்​களில் மீதமிருந்த 719 பேருக்கு வரும் 13-ம் தேதி ஆணை​கள்வழங்​கப்​படும்.

மேலும் தமிழ்​நாடு டாக்​டர் எம்​ஜிஆர் மருத்​துவ பல்​கலைக்​கழகத்​தின் நிதி ஆதா​ரத்​தோடு திருநெல்​வேலி, திருச்​சி, தரு​மபுரி, வேலூர், ஈரோடு, திரு​வண்​ணா​மலை ஆகிய 6 மாவட்​டங்​களில் உள்ள அரசு மருத்​து​வக் கல்​லூரி​களில் செவிலியர் கல்​லூரி​கள் தொடங்​கப்​பட​வுள்​ளன. அதற்​கான பணி​கள் தற்​போது தொடங்​கியது. இவ்​வாறுஅவர் தெரி​வித்​தார்.

விழா​வில் துறை செயலர் ப.செந்​தில்​கு​மார், துணைவேந்​தர் நாராயண​சாமி, மருத்​து​வக்கல்வி மற்​றும் ஆராய்ச்சி இயக்​குநர் சுகந்தி ராஜகு​மாரி, இணை இயக்​குநர் சங்​கர் சண்​முகம் உள்ளிட்டோர் பங்​கேற்​றனர்​.

SCROLL FOR NEXT