தமிழகம்

போதிய வகுப்பறைகள் ஒதுக்கப்படாததை கண்டித்து சிவகங்கை அரசு கல்லூரி மாணவிகள் போராட்டம்

மயங்கி விழுந்த 12 பேரை பூட்டை உடைத்து காப்பாற்றிய தோழிகள்

செய்திப்பிரிவு

சிவகங்கை: சிவகங்கை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் பிபிஏ பாடப் பிரிவில் மொத்தம் 300 மாணவிகள் உள்ளனர். ‎இதற்கு 6 வகுப்பறைகள் தேவைப்படும் நிலையில், இத்துறைக்கு 2 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன.

போதிய வகுப்பறைகளை ஒதுக்க வேண்டுமென நேற்று காலை முதல்வர் (பொறுப்பு) இந்திராவை சந்தித்து மனு கொடுக்கச் சென்றனர். ஆனால், அவரை சந்திக்க அனுமதிக்காததால், மாணவிகள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். கல்லூரி வளாக கேட்டை பூட்டியதால், உள்ளேயே அமர்ந்து போராட்டத்தை தொடர்ந்தனர்.வெயிலின் தாக்கத்தால் 12 மாணவிகள் மயக்கமடைந்தனர்.

அவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதையடுத்து, சக மாணவிகளே ஆம்புலன்ஸை வரவழைத்து கதவின் பூட்டை உடைத்து மயக்கமடைந்த மாணவிகளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்து வந்த வட்டாட்சியர் சிவராமன் போராட்டம் குறித்து கல்லூரி நிர்வாகத்திடமும், மாணவிகளிடமும் விசாரணை நடத்தினார்.

SCROLL FOR NEXT