தமிழகம்

சிங்கப்பெண் அதிரடிப் படை மூலம் 2,032 புகார்கள் மீது நடவடிக்கை: 187 வழக்குகள் பதிவு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்​தில் பெண்​கள் மற்​றும் குழந்​தைகளின் பாது​காப்பை உறுதி செய்​யும் நோக்​கில் தொடங்​கப்​பட்ட ‘சிங்​கப்​பெண்’ சிறப்பு அதிரடிப் படை, மாநிலம் முழு​வதும் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது. கடந்த ஜூன் 10-ம் தேதி தனது பணியை தொடங்​கிய இந்​தப் படை​யின் மூலம் இது​வரை 187 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ள​தாக தமிழக காவல் துறை தெரி​வித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்​டுள்ள செய்​திக்​குறிப்​பில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: சிங்​கப்​பெண் அதிரடிப்​படைக்கு கடந்த ஒரு வாரத்​தில் மட்​டும் வரப்​பெற்ற 346 புகார்​களுக்கு உடனடித் தீர்வு காணப்​பட்​டு, 28 குற்ற வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன. மேலும், காணா​மல் போன 6 பெண்​கள் மற்​றும் 14 குழந்​தைகள் பத்​திர​மாக மீட்​கப்​பட்டு அவர்​களின் குடும்​பத்​தினரிடம் ஒப்​படைக்​கப்​பட்​டனர். அறி​வு​சார் குறை​பாடுடைய 14 நபர்​கள் மீட்​கப்​பட்டு மறு​வாழ்வு மையங்​களில் சேர்க்​கப்​பட்​டனர்.

மேலும், ஒரு குழந்தைத் திரு​மணம் தடுத்து நிறுத்​தப்​பட்​டதுடன், பள்​ளியி​லிருந்து நின்ற 51 குழந்​தைகள் மீண்​டும் கல்​வியைத் தொடர நடவடிக்கை எடுக்​கப்​பட்​டுள்​ளது. மாநிலம் முழு​வதும் 3,580 விழிப்​புணர்வு நிகழ்ச்​சிகள் நடத்​தப்​பட்​டன. 9,397 முக்​கிய இடங்​களில் தீவிரரோந்​துப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டன. அந்​தவகை​யில், ஜூன் 10-ம் தேதி முதல் ஜூலை 23-ம் தேதி வரை ஒன்​றரை மாத காலத்​தில் மொத்​தம் 2,032 புகார்​கள் மீது நடவடிக்கை எடுக்​கப்​பட்​டு, 187 வழக்​கு​கள் பதிவு செய்​யப்​பட்​டுள்​ளன.

ஒட்​டுமொத்​த​மாக இது​வரை காணா​மல்​போன 96 பெண்​கள் மற்​றும் குழந்​தைகள் மீட்​கப்​பட்​டுள்​ளனர். 22 குழந்தைத் திரு​மணங்​கள் தடுத்து நிறுத்​தப்​பட்​டுள்​ளன. 169 பள்ளி இடைநிற்​றல் குழந்​தைகள் மீண்​டும் பள்​ளி​களில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர். 57 அறி​வு​சார் குறை​பாடுடைய நபர்​களுக்கு மறு​வாழ்வு அளிக்​கப்​பட்​டுள்​ளது. குற்​றங்​கள் நடை​பெற வாய்ப்​புள்​ள​தாக கண்​டறியப்​பட்ட 58,346 இடங்​களில் தீவிர கண்​காணிப்பு மற்​றும் ரோந்​துப் பணி​கள் மேற்​கொள்​ளப்​பட்​டுள்​ளன. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT