அமைச்சர் வ.காந்திராஜ்

 
தமிழகம்

மகளிர் சுயதொழில் தொடங்க ‘சிங்கப் பெண் கடன்’ திட்டம்: நடப்பாண்டில் 41,369 பேருக்கு ரூ.3,428 கோடி கடனுதவி

செய்திப்பிரிவு

சென்னை: கூட்டுறவுத் துறை அமைச்சர் வ.காந்திராஜ் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: பெண்களின் பொருளாதார தற்சார்பை உறுதி செய்ய, கூட்டுறவுத் துறை சார்பில் ‘சிங்கப் பெண் கடன்’ திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிகுழு உறுப்பினர்கள், கைம்பெண்கள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், தொழில்முனைவோர் மற்றும் பணிபுரியும் மகளிர் கடனுதவி பெறலாம்.

அதன்படி தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மாவட்ட மத்திய கூட்டுறவு, நகரக்கூட்டுறவு வங்கிகள், நகரக்கூட்டுறவுக் கடன் சங்கங்கள், மலைவாழ் மக்கள் கூட்டுறவுச் சங்கங்கள், தமிழ்நாடு மாநிலதலைமைக் கூட்டுறவு வங்கிகள்மூலமாக நடப்பாண்டில் நவம்பர் வரை 41,369 பயனாளிகளுக்கு ரூ.3,428.49 கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

கந்துவட்டி பிடியில் இருந்து மக்களை மீட்டு, பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. புதிய சுயதொழில் தொடங்க விரும்பும்பெண்களும், தொழிலை விரிவுபடுத்த விரும்புபவர்களும் தங்களுக்கு அருகிலுள்ள மாவட்டமத்தியக் கூட்டுறவு வங்கிகள்அல்லது தொடக்க வேளாண்மைக் கூட்டுறவுக் கடன் சங்கங்களை நேரில் அணுகி கடனுதவிபெறலாம். கூடுதல் விவரங்களுக்கு 98840 00845 என்ற வாட்ஸ்அப் உதவி எண்ணைத் தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அறிக் கையில் கூறப்பட்டுள்ளது.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT