தமிழகம்

மின்கம்பத்தில் ஏறி இறங்க ஷூ பயன்படுத்தலாம்: கள உதவியாளர் பணி உடல்தகுதி தேர்வில் மாற்றம்

செய்திப்பிரிவு

சென்னை: கள உதவி​யாளர் பணி உடல்​தகுதி தேர்​வில், மின்​கம்​பம் ஏறி இறங்க ஷூ பயன்​படுத்​தலாம் என, விதி​களில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது.

தமிழக மின்​வாரி​யத்​தில் 1,850 களஉத​வி​யாளர் பணி​யிடங்​களுக்​கான ஆட்​களை தேர்வு செய்​வதற்​கான அறிவிக்கை 2025-ம் ஆண்டு வெளி​யிடப்​பட்​டது. கடந்த ஆண்டு நவம்​பர் 16-ம் தேதி தமிழ்​நாடு அரசுப் பணி​யாளர் தேர்​வாணை​யம் மூலம் எழுத்து தேர்வு நடத்​தப்​பட்​டது. 23 ஆயிரம் பேர் விண்​ணப்​பித்த நிலை​யில், 15 ஆயிரம் பேர் தேர்வு எழு​தினர். இதில் 9,400 பேர் தேர்ச்சி பெற்​றனர்.

தேர்ச்சி பெற்​றவர்​களுக்​கான சான்​றிதழ் சரி​பார்ப்பு பணி​கள் முடிந்​துள்ள நிலை​யில், அடுத்​தக்​கட்​ட​மாக, உடற்​தகுதி தேர்வு நடை​பெறவுள்​ளது. இந்​நிலை​யில் மின்​வாரிய கள உதவி​யாளர் பணிக்​கான உடல் தகுதி தேர்வு விதி​முறை​களில் மாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளது. அந்த வகை​யில், மின்​வாரிய கள உதவி​யாளர் பணிக்​கான உடல் தகுதி தேர்​வில், மின்​கம்​பம் ஏறி இறங்​கும் தேர்​வுக்கு ஷூ பயன்​படுத்​தலாம் என விதி​களை திருத்​தம் செய்து தமிழ்​நாடு மின்​வாரி​யம் உத்​தர​விட்​டுள்​ளது. இதற்கு முன்​ன​தாக வெறும் காலில் மின்​கம்​பம் ஏறி இறங்க வேண்​டும் என்ற விதி இருந்​தது.

அதாவது, 30 அடி உயர மின்​கம்​பத்​தில் ஏறி கால் வைக்க கட்​டையை கட்​டி, பின்​னர் பிடிப்​புக்கு ஒரு கயிற்றை கட்ட வேண்​டும். இவை அனைத்​தும் 8 நிமிடங்​களில் செய்ய வேண்​டும். தற்​போது வெறும் காலில் மின்​கம்​பம் ஏற வேண்​டும் என்ற வி​தியை திருத்தி ஷூ அணி​ய​லாம் என அறி​விப்பு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT