கோப்புப் படம்
சென்னை: தமிழக பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள டெண்டர் அறிவிப்பில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ், ஆங்கிள் பூட்ஸ், மழைகோட், கம்பளி ஸ்வெட்டர் ஆகியவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இவை ரூ.56 கோடியில் கொள்முதல் செய்யப்பட உள்ளன.
அதன்படி அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு 28 லட்சத்து 32,935 ஜோடி ஷூக்கள் வாங்க ரூ.37.24 கோடிக்கும், 58 லட்சத்து 23,755 ஜோடி சாக்ஸ் வாங்க ரூ.9.07 கோடிக்கும் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
அதேபோல், மலைப்பகுதிபள்ளி மாணவர்களுக்கு 91,771 மழைகோட்டுகள் ரூ.3.32 கோடியிலும், 92,062 கம்பளி ஸ்வெட்டர்கள் ரூ.2.42 கோடியிலும், 91,351 ஜோடி ஆங்கிள் பூட்ஸ்கள் ரூ.4 கோடியிலும் வாங்கப்பட உள்ளன.
இவை அந்தந்த மாவட்ட, வட்டாரக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பவேண்டும்.
விருப்பமுள்ள நிறுவனங்கள் tntenders.gov.in எனும் இணையதளம் வழியாக டிசம்பர் 10-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தம் பெறும் நிறுவனங்கள் ஆணை கிடைத்த 120 நாட்களுக்குள் பொருட்களை வழங்க வேண்டும். சாக்ஸ்களை மட்டும் 90 நாட்களுக்குள் வழங்க வேண்டும்.