தமிழகம்

சென்னை மாநகராட்சி கூட்ட அரங்கில் காங்கிரஸ் கவுன்சிலர்களுக்கு தனி இருக்கை: காங்கிரஸ் குழுத் தலைவர் வலியுறுத்தல்

செய்திப்பிரிவு

சென்னை: ​மாநக​ராட்சி கூட்ட அரங்​கில் காங்​கிரஸ் கவுன்​சிலர்​களுக்கு என்று தனி இருக்கை வசதி செய்து தர வேண்​டும் என, சென்னை மாநக​ராட்சி காங்கிரஸ் குழுத் தலை​வர் சாமுவேல் திர​வி​யம் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து, அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: கடந்த 4 ஆண்​டு​களில் காங்​கிரஸ் கவுன்​சிலர்​கள் முன்​மொழிந்த பல திட்​டங்​களை சென்னை மாநக​ராட்சி நிர்​வாகம் செயல்​படுத்​தாமல் தாமதப்​படுத்தி வரு​கிறது.

இந்த தாமதத்​தால் பொது​மக்​கள் பல்​வேறு பிரச்​சினை​களைச் சந்​தித்து வரு​கின்​றனர். எனவே, விடு​பட்ட அனைத்​துப் பணி​களை​யும் அடுத்த சில மாதங்​களுக்​குள் போர்க்​கால அடிப்​படை​யில் விரைந்து முடிக்க வேண்​டும்.

சென்னை மாநக​ராட்​சிக்கு என்று இருந்த தனித்​து​வ​மான சிசிஎம்சி சட்​டம் ரத்து செய்​யப்​பட்​ட​தால், சென்னை தனது பிரத்​யேகத் தன்​மையை இழந்து வரு​கிறது.

சென்னை நகரின் கட்​டமைப்​பு, பிரச்​சினை​கள் குறித்​துப் போதிய அனுபவ​மும், நிபுணத்​து​வ​மும் வாய்ந்த சென்னை மாநக​ராட்சி ஊழியர்​கள் பலர் பிற நகரங்​களுக்கு இடமாற்​றம் செய்​யப்​பட்​டுள்​ளனர்.

இதனால் பரு​வ​மழை உள்​ளிட்ட பேரிடர் காலத் தயாரிப்​புப் பணி​களில் சில பகு​தி​களில் தொய்வு ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இந்த புதிய சட்ட விதி​களின் தாக்​கம் குறித்து அரசு முறை​யான ஆய்வு நடத்த வேண்​டும்.

மாநக​ராட்சி கூட்ட அரங்​கில் காங்கிரஸ் கவுன்​சிலர்​களுக்கு என்று தனி இருக்கை வசதி செய்து தரப்பட வேண்டும். சென்னை மாவட்​டத்​தைச் சேர்ந்த 6 அமைச்​சர்​களும், அனைத்து எம்​எல்​ஏக்​களும் இக்​கூட்​டத்​தில் பங்​கேற்​பதை உறுதி செய்ய வேண்​டும்.

கடந்த திமுக ஆட்​சி​யின்​போது வார்டு குழுக்​கள் மற்​றும் கவுன்​சிலர்​களின் அதி​காரங்​கள் குறைக்​கப்​பட்​டன. தற்​போதைய அரசு, உள்​ளாட்​சிப் பிர​தி​நி​தி​கள் மக்​களுக்​காகத் திறம்​படப் பணி​யாற்ற ஏது​வாக, வார்டு குழுக்​கள் மற்​றும் கவுன்​சிலர்​களின் பழைய அதி​காரங்​களை உடனடி​யாக மீட்​டெடுத்து வழங்​க வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ தெரி​வித்​தார்​.

SCROLL FOR NEXT