தமிழகம்

தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் மின்வெட்டு: செந்தில் பாலாஜி கடும் விமர்சனம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘தமிழகத்​தில் நாளுக்​கு​நாள் மின்வெட்டு அதி​கரித்து வரு​கிறது. தலை​மைச் செயல​கத்​தில்​கூட மின்​தடை ஏற்​படும் அளவுக்கு மின் நிர்​வாகம் சீரழிந்​து​விட்​டது’ என, முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி குற்​றம்​சாட்​டி​யுள்​ளார்.

இதுகுறித்து செய்​தி​யாளர்​களிடம் அவர் கூறிய​தாவது: தமிழகத்​தில் மின்​வெட்​டைப் பற்​றி பேசாத நாட்​களே இல்​லை. அரசு விழாக்​களி​லும், சட்​டக்​கல்​லூரி பட்​டமளிப்பு விழாக்​களி​லும், உச்​சபட்​ச​மாகத் தலை​மைச் செயல​கத்​தில்​கூட மின்​தடை ஏற்படு​கிறது.

முந்​தைய திமுக ஆட்​சி​யில், எவ்​விதத் தடை​யும் இன்றி சீரான மின் விநி​யோகம் செய்​யப்​பட்​டது. டான்​ஜெட்​கோ​வின் சொந்த மின் உற்​பத்தி 29 ஆயிரம் மில்​லியன் யூனிட்​டாக உயர்த்​தப்​பட்​டது. ஆனால், தற்​போதைய ஆட்​சி​யில் பிளான்ட் உற்​பத்தி 34 சதவீதம் முதல் 35 சதவீத​மாகக் குறைக்​கப்​பட்​டுள்​ளது.

வடசென்னை ஸ்டேஜ் 3 மற்​றும் உடன்​குடி போன்ற புதிய மின் உற்​பத்​தித் திட்​டங்​கள் முழு​மை​யாகப் பயன்​பாட்​டுக்​குக் கொண்​டு​வரப்​பட​வில்​லை. கடந்த காலத்​தில் எதிர்க்​கட்​சி​யாக இருந்​த​போது ரூ.20-க்கு மின்​சா​ரம் வாங்​கு​வதைக் கண்​டித்​தவர்​கள், இன்று வெளிச்​சந்​தை​யில் யூனிட் ஒன்​றுக்கு ரூ.35 வரை அதிக விலை கொடுத்து மின்​சா​ரம் கொள்​முதல் செய்​கின்​றனர்.

வழக்​க​மாக நவம்​பர், டிசம்​பர் மாதங்​களி​லேயே டெண்​டர் கோரப்​பட்டு பொங்​கலுக்கு முன்பே இறுதி செய்​யப்​படும். ஆனால் தற்​போது, வெறும் 5 நாள் அவகாசத்​தில் 2,500 மெகா​ வாட்​டுக்கு அவசரக்​க​தி​யாக டெண்​டர் கோரப்​பட்டு இறுதி செய்​யப்​படு​வ​தில் கடுமை​யான முறை​கேடு​களும், ஊழலும் நடந்​துள்​ளன.

இதனால் மின்​வாரி​யத்​தின் கடன் சுமை மேலும் அதி​கரித்​து, அது மக்​கள் மீது மின்​ கட்​ட​ணச் சுமை​யாக வந்து சேரும். எனவே, கடந்த கால திரா​விட மாடல் ஆட்​சி​யின் முறை​களைப் பின்​பற்றி தமிழகத்​தில் தடையற்ற சீரான மின் விநி​யோகத்தை அரசு உறுதி செய்ய வேண்​டும். இவ்​வாறு அவர் கூறினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT