செந்தில் பாலாஜி | கோப்புப்படம்

 
தமிழகம்

தலைமறைவானதாக கூறப்பட்ட நிலையில் காவல் நிலையத்தில் ஆஜரானார் செந்தில் பாலாஜி

செய்திப்பிரிவு

சென்னை: ​டாஸ்மாக் வழக்​கில் கைதுக்கு பயந்து தலைமறை​வான​தாக கூறப்​பட்ட நிலை​யில், 2 நாட்​களுக்​குப் பிறகு மீண்​டும் காவல் நிலை​யத்​தில் செந்​தில் பாலாஜி நேற்று ஆஜரா​னார்.

தவெக எம்​எல்​ஏ​விடம் ரூ.35 கோடி வரை பேரம் பேசப்​பட்​ட​தாக பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி, அவரது தம்பி அசோக்​கு​மார் ஆகியோ​ருக்கு நீதி​மன்​றம் நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கி​யிருந்​தது. அதன்​படி, இரு​வரும் தின​மும் காலை, மாலை​யில் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்டு வந்​தனர்.

இதனிடையே, டாஸ்​மாக் நிறு​வனத்​தில் நடந்த முறை​கேடு தொடர்​பாக செந்​தில் பாலாஜி மீது லஞ்ச ஒழிப்பு போலீ​ஸார் புதிய வழக்கை பதிவு செய்​தனர். அதன்​பின், 2 நாட்​களாக செந்​தில் பாலாஜி காவல் நிலை​யத்​தில் ஆஜரா​காமல் இருந்​தார். கைது நடவடிக்​கைக்கு பயந்து அவர் தலைமறை​வான​தாக கூறப்​பட்​டது.

டாஸ்​மாக் முறை​கேடு வழக்​கில் செந்​தில் பாலாஜிக்கு முன்​ஜாமீன் வழங்​கியதோடு, அவரை கைது செய்​ய​வும் உச்ச நீதி​மன்​றம் தடை விதித்​தது. இதையடுத்​து, 2 நாட்​களுக்​குப் பிறகு மீண்​டும் நேற்று காலை செந்​தில் பாலாஜி மற்​றும் அசோக்​கு​மார் இரு​வரும் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்​டனர். அப்​போது அவர்​களிடம் சுமார் 2 மணி நேரம் போலீ​ஸார் விசா​ரணை நடத்​தினர்.

விசா​ரணை முடிந்து வெளியே வந்த செந்​தில்​பாலாஜி, செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: லஞ்ச ஒழிப்​புத்​துறை தற்​போது பதிவு செய்​துள்ள புதிய வழக்கு நிலைக்​காது. அமலாக்​கத் துறை​யின் ஆவணங்​களை வைத்தே இந்த வழக்கை பதிவு செய்​துள்​ளனர். ஆக்​கப்​பூர்​வ​மான அரசு என்​பது மக்​கள் குறை​களை தீர்ப்​ப​தில் கவனம் செலுத்த வேண்​டும். ஆனால், இந்த அரசு வழக்​கு​கள் போடு​வ​திலேயே முனைப்பு காட்​டு​கிறது.

எத்​தனை பொய் வழக்​கு​கள் போட்​டாலும் அவற்றை சட்​டப்​படி எதிர்​கொண்​டு, உண்​மை​யில்லை என்​பதை நிரூபிப்​போம். இவ்​வாறு அவர் தெரி​வித்​தார். இதனிடையே, டாஸ்​மாக் முறை​கேடு புகாரில் செந்​தில் பாலாஜி​க்கு விரை​வில் சம்​மன் அனுப்​பி, நேரில் வரவழைக்க அதி​காரி​கள் திட்​ட​மிட்டு வருகின்​றனர்​.

SCROLL FOR NEXT