தமிழகம்

தமிழ்நாடு, புதுச்சேரி பார் கவுன்சில் தலைவராக செஞ்சி கே.கதிரவன் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: தமிழ்நாடு, புதுச்​சேரி பார் கவுன்​சில் தலை​வ​ராக வழக்​கறிஞர் செஞ்சி கே.க​திர​வனும், துணைத்தலை​வ​ராக வழக்​கறிஞர் இ.பால​முரு​க​னும், அகில இந்​திய பார் கவுன்​சில் உறுப்​பின​ராக வழக்​கறிஞர் பி.எஸ்​.அமல்​ராஜும் போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர்.

தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்கு மொத்​தம் உள்ள 25 உறுப்​பினர்​களில் 2 நியமன பெண் உறுப்​பினர்​கள் தவிர எஞ்​சிய 23 உறுப்​பினர்​களை தேர்ந்​தெடுப்​ப​தற்​கான தேர்​தல் கடந்த மார்ச் 30-ம் தேதி தமிழகம் மற்​றும் புதுச்​சேரி​யில் நடை​பெற்​றது.

இத்​தேர்​தலில் மொத்​தம் 143 வழக்​கறிஞர்​கள் போட்​டி​யிட்​டனர். இதில் முன்​னுரிமை வாக்​கு​கள் அடிப்​படை​யில் 23 பேர் வெற்றி பெற்​றனர். இதையடுத்து, உச்ச நீதி​மன்ற உத்​தர​வுப்​படி ஓய்வு பெற்ற உயர் நீதி​மன்ற நீதிபதி வி.எம்​.வேலுமணி, உயர் நீதி​மன்ற சமரச தீர்வு மைய பயிற்​சி​யாள​ரும், வழக்​கறிஞரு​மான சுதர்​ஷனா சுந்​தர் ஆகிய இருவரை நியமன உறுப்​பினர்​களாக நியமித்து உயர் நீதி​மன்ற தலைமை நீதிபதி எஸ்​.ஏ.தர்​மா​தி​காரி உத்​தர​விட்​டார்.

இந்​நிலை​யில் தமிழ்​நாடு மற்​றும் புதுச்​சேரி பார் கவுன்​சிலுக்​கான புதிய தலை​வர், துணைத் தலை​வர் மற்​றும் அகில இந்​திய பார் கவுன்​சிலுக்​கான உறுப்​பினர் ஆகியோரை தேர்வு செய்​வதற்​கான தேர்​தல் இன்று (செப்​.16) நடை​பெறும் என அறிவிக்​கப்​பட்​டது. இதற்​கான வேட்​புமனுத் தாக்​கல் நேற்று நடை​பெற்​றது.

இதில் புதிய தலை​வ​ராக வழக்​கறிஞர் செஞ்சி கே.க​திர​வனும், துணைத் தலை​வ​ராக வழக்​கறிஞர் இ.பால​முரு​க​னும், அகில இந்​திய பார் கவுன்​சில் உறுப்​பின​ராக வழக்​கறிஞர் பி.எஸ்​.அமல்​ராஜும் ஒரு​மன​தாக போட்​டி​யின்றி தேர்வு செய்​யப்​பட்​டனர்.

இவர்​களுக்​கான சான்​றிதழை தேர்​தல் அதி​காரி​யான ஓய்​வு​பெற்ற நீதிபதி கே.என்​.​பாஷா மற்​றும் அகில இந்​திய பார் கவுன்​சில் செய​லா​ள​ரான அசோக்​கு​மார் பாண்டே நிர்​வாகி​கள் வழங்​கினர். பின்​னர் வெற்றி பெற்ற பார் கவுன்​சில் நிர்​வாகி​கள் தமிழக சட்​டத்​துறை அமைச்​சர் சி.டி.ஆர். நிர்​மல்​கு​மாரை சந்​தித்​து வாழ்​த்​து பெற்​றனர்​.

SCROLL FOR NEXT