செங்கோட்டையன்

 
தமிழகம்

செலவின்றி சரித்திர வெற்றி: கோவையில் செங்கோட்டையன் பெருமிதம்

செய்திப்பிரிவு

கோவை: ​வாக்​காளர்​களுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்​காமல் சரித்​திர வெற்​றியை தவெக பெற்​றுள்​ள​தாக, செங்​கோட்​டையன் தெரி​வித்​தார்.

பீளமேடு விமான நிலை​யத்​தில் கோபி தொகுதி எம்​எல்ஏ செங்​கோட்​டையன் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: ஒரு இயக்​கம் வளர வேண்​டும் என்​றால் தியாகம் செய்யவேண்​டும். அண்​ணா, எம்​ஜிஆர், ஜெயலலிதா தியாகத்​தால் வளர்ந்த இயக்​கம் தற்​போது தடு​மாறிக் கொண்​டிருக்​கிறது. மக்​கள் சக்​தி​யாக தற்​போது தவெக மாறி​யிருக்​கிறது.

வாக்​காளர்​களுக்கு ஒரு ரூபாய் கூட வழங்​காமல் முதல் தேர்​தலில் சரித்​திர வெற்றி பெற்​றுள்​ளோம். விஜய்யை மக்​கள் நேசிக்​கிறார்​கள். நேசிக்​கின்ற மக்​களுக்கு அவர் உறு​துணை​யாக இருப்​பார். மனிதநே​யம் அவரிடத்​தில் இருக்​கிறது. அதனை நீங்​கள் பார்ப்​பீர்​கள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

SCROLL FOR NEXT