செல்வப்பெருந்தகை | கோப்புப் படம்

 
தமிழகம்

‘பெண்மணி சொன்னதில் அர்த்தங்கள் ஆயிரம்’ - புதிர் போட்ட செல்வப்பெருந்தகை

செய்திப்பிரிவு

என்​னைத் தொலைக்​காட்​சி​யில் மட்​டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்​மணி ஆதங்​கப்​பட்​டார். அதில் ஆயிரம் அர்த்​தங்​கள் இருந்தன என்று தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்வப்பெருந்தகை தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூரில் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முன்​பெல்​லாம் தொகுதி மக்​களு​டன் நேரடி​யாகக் கலந்து பழகினேன். தற்​போது மாநிலத் தலை​வர் பொறுப்​பில் இருப்​ப​தால், என்​னைத் தொலைக்​காட்​சி​யில் மட்​டுமே பார்க்க முடிகிறது என ஒரு பெண்​மணி ஆதங்​கப்​பட்​டார். அதில் ஆயிரம் அர்த்​தங்​கள் இருந்​தன. தொகுதி மக்​களின் பிள்​ளை​யாக இருந்த என்​னை, காங்​கிரஸ் தலைமை இன்று தமிழகத்​தின் பிள்​ளை​யாக மாற்றி 234 தொகு​தி​களி​லும் பணி​யாற்​றும் பொறுப்பை வழங்​கி​யுள்​ளது.

          

இருப்​பினும், எனது தொகுதி மக்​கள் விரும்​பி​னால் இந்​தத் தலை​வர் பதவியைத் துறந்​து​விட்​டு, ஸ்ரீபெரும்​புதூர் தொகுதி மக்​களு​டனேயே ஒரு சாதா​ரணக் குடிமக​னாக வாழ நான் தயா​ராக இருக்​கிறேன். ராகுல் காந்தி வரும் ஏப்​ரல் 6-ம் தேதி சென்னை வழி​யாகப் புதுச்​சேரிக்​குச் சென்று தேர்​தல் பிரச்​சா​ரம் மேற்​கொள்​கிறார். அதனைத் தொடர்ந்​து, ஏப்​ரல் 9-ம் தேதி தமிழகத்​திற்கு அவரை வரவழைப்​ப​தற்​கான திட்​ட​மிடல்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. இது குறித்த அதி​காரப்​பூர்வ அறி​விப்பு விரை​வில் வெளி​யாகும்​. இவ்​வாறு அவர்​ தெரிவித்​தார்.

SCROLL FOR NEXT