தமிழகம்

முதல்வர் குறித்து அவதூறு பேசிய வழக்கில் எஸ்பிளனேடு காவல் நிலையத்தில் சேகர்பாபு ஆஜர்

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் கடந்த செப்​டம்​பர் 12-ம் தேதி திமுக சார்​பில் கண்​டன ஆர்ப்​பாட்​டம் நடை​பெற்​றது. சட்​டப் பேரவை​யில் முதல்வர் விஜய் கூறிய கருத்​துகளுக்கு எதிர்ப்பு தெரி​வித்து இந்த ஆர்ப்​பாட்​டம் நடத்​தப்​பட்​டது.

சென்னை ராஜாஜி சாலை, நாராயணப்பா தெரு​வில் நடை​பெற்ற ஆர்ப்​பாட்​டத்​தில் சேகர்​பாபு கலந்​து​கொண்டு பேசினார்.

அப்​போது தமிழக முதல்​வர் விஜய், அமைச்​சர் சிடிஆர் நிர்​மல்​குமார் ஆகியோரை தரக்​குறைவாக விமர்​சனம் செய்​த​தாக குற்​றச்​சாட்டு எழுந்​தது.

இது​தொடர்​பாக தவெக-வை சேர்ந்த ஜெகதீஸ்வரி என்​பவர் வடக்கு கடற்​கரை காவல் நிலை​யத்​தில் வீடியோ ஆதாரத்துடன் புகார் அளித்​தார். இதையடுத்து சேகர்​பாபு மீது 6 பிரிவு​களின் கீழ் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கில் விசா​ரணைக்கு நேரில் ஆஜராகும்​படி சேகர்​பாபுவுக்கு போலீ​ஸார் சம்​மன் அனுப்​பி​யிருந்​தனர். இதற்​கிடையே, பாரிமுனை வடக்கு கடற்​கரை காவல் நிலை​யம் பரபரப்​பான பகுதி​யாக இருப்​ப​தால், விசா​ரணையை எஸ்பிளனேடு காவல் நிலை​யத்​தில் நடத்த போலீ​ஸார் முடிவு செய்​தனர்.

அதன்​படி, நேற்று காலை 11 மணிக்கு சேகர்​பாபு எஸ்பிளனேடு காவல் நிலை​யத்​தில் ஆஜரானார். அவரிடம் புகாரில் கூறப்​பட்​டுள்ள குற்​றச்​ சாட்​டுகள், ஆர்ப்​பாட்​டத்​தில் பேசிய கருத்​துகள் மற்​றும் வீடியோ ஆதா​ரங்​கள் தொடர்​பாக போலீ​ஸார் ஒன்​றரை மணி நேரம் விசா​ரணை நடத்​தினர்.

தேவைப்​பட்​டால் மீண்​டும் விசா​ரணைக்கு வரவேண்​டும் எனக்​ கூறி அவரை அனுப்பி வைத்​தனர்.

போலீ​ஸாரிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்ட வழக்​கில் இரு தினங்​களுக்கு முன்​னர் சேகர்​பாபுவிடம் வேப்​பேரி போலீ​ஸார் விசா​ரணை நடத்தி இருந்த நிலை​யில், தற்​போது வேறொரு வழக்​கில் அவரிடம் மற்​றொரு காவல் நிலைய போலீ​ஸார் விசாரணை நடத்தி உள்ளனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT