தமிழகம்

முருகனின் வரலாற்றை திரித்தால் கடும் எதிர்விளைவுகள் இருக்கும்: ஜூனியர் என்டிஆர் படத்துக்கு சீமான் கண்டனம்

செய்திப்பிரிவு

சென்னை: ​முரு​கப்​பெரு​மானின் வரலாற்றை திரித்​தால் கடும் எதிர்​விளைவு​களைச் சந்​திக்க நேரிடும் என ஜூனியர் என்​டிஆர் படத்​துக்கு நாம் தமிழர் கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் கண்​டனம் தெரி​வித்​துள்​ளார்.

இதுதொடர்​பாக, அவர் வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: முரு​கப்​பெரு​மானின் அறு​படை வீடு​கள் உட்பட தமிழகத்​தின் குன்​றுகள் தோறும் குமரனின் கோட்​டங்​கள் நிறைந்​துள்​ளன.

முதுபெரும் தமிழ் இலக்கண நூலாகிய தொல்​காப்​பி​யம் தொடங்கி திரு​முரு​காற்​றுப்​படை வரை சங்​கத்​தமிழ் இலக்​கி​யங்​கள் பலவும், சேயோன், நெடு​வேள் என்று பற்பல பெயர்​களால் முரு​கனை போற்றி புகழ்​கின்​றன. தமிழ்​தான் முரு​கன். முரு​கன்​தான் தமிழ். இரண்​டை​யும் பிரிக்க முடி​யாது.

இந்​நிலை​யில் தமிழ்க் கடவுள் முரு​கப்​பெரு​மானை மையப்​படுத்தி ஆந்​தி​ரா​வில், இயக்​குநர் திரிவிக்​ரம் இயக்​கத்​தில், நடிகர் ஜூனியர் என்​டிஆர் நடிக்​கும் படத்​தில், முரு​கனைவடபுலத்​தில் பிறந்​தவர் என்ற கருத்​துரு​வாக்​கத்​துடன் உரு​வாக்​குவதை உறு​திப்​படுத்​தும் வித​மாக படக்​குழு பதி​விட்​டிருப்​பது அதிர்ச்​சிஅளிக்​கிறது.

தமிழர் போற்றும் தெய்​வங்​களை வணங்கு​வதற்கு யாருக்கும் உரிமை உண்​டு. ஆனால் வரலாற்றை தவறாக திரித்து இழி​வு படுத்த உரிமை இல்​லை. முரு​கப்​பெரு​மான் வடபுலத்​தில் பிறந்​தார் என்​பது போன்ற கட்​டுக்​கதைகளை உரு​வாக்கி அவற்றை கலை என்ற பெயரில் திரித்து திணிக்க முயல்​வதை படக்​குழு கைவிட வேண்​டும்.

இல்​லை​யென்​றால் படக்​குழு மிகக் கடுமை​யான எதிர்​விளைவு​களை எதிர்​கொள்ள நேரிடும். எதிர்ப்பை மீறி படம் உருப்​பெற்று வெளிவந்​தால் தமிழகத்​தில் எந்​தவொரு திரையரங்​கிலும் இத்​திரைப்​படத்தை திரை​யிட​வி​டா​மல் நாம் தமிழர் கட்சி போ​ராட்​டத்தை முன்​னெடுக்​கும்​. இவ்​வாறு அதில்​ தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT