சீமான்

 
தமிழகம்

இலவச அறிவிப்புகளுக்காக அரசு கடன் வாங்குவதா? - மதுராந்தகம் பிரச்சாரத்தில் சீமான் கண்டனம்

செய்திப்பிரிவு

மதுராந்தகம்: மது​ராந்​தகம் சட்​டப்​பேர​வைத் தொகுதி இடைத்​தேர்​தலில் நாம் தமிழர் கட்சி சார்​பில் போட்​டி​யிடும் வேட்​பாளர் கோ.ஜானகி​ராமனை ஆதரித்​து, அக்​கட்​சி​யின் ஒருங்​கிணைப்​பாளர் சீமான் நேற்று மது​ராந்​தகம் தேரடி தெரு​வில் பிரச்​சா​ரம் மேற்​கொண்​டார்.

அப்​போது பேசிய அவர், தேர்​தல் நேரத்​தில் மக்​களைக் கவரும் வகை​யில் பல்​வேறு இலவசத் திட்​டங்​கள் குறித்த அறி​விப்​பு​கள் வெளி​யிடப்​படு​வ​தாக விமர்​சித்​தார். ஆட்​சிக்கு வந்​தால் மாதம் ரூ.2,500 வழங்​கப்​படும் என்​றும், 6 சிலிண்​டர்​கள் வழங்​கப்​படும் என்​றும் வாக்​குறுதி அளிக்​கப்​பட்ட நிலை​யில், தற்​போது நிதிச்​சுமை மற்​றும் கடன் இருப்​ப​தாகக் கூறி 3 சிலிண்​டர்​கள் வழங்​கப்​படும் என அறி​விப்​பது ஏன்?

மேலும், வேலை இல்​லாதவர்​களுக்கு மாதம் ரூ.4,000 வழங்​கு​வது உள்​ளிட்ட அறி​விப்​பு​கள் குறித்து விமர்​சித்த சீமான், கடன் வாங்கி இலவசத் திட்​டங்​களை செயல்படுத்​து​வது குறித்து அரசு விளக்​கமளிக்க வேண்​டும் என வலியுறுத்தினார்.

SCROLL FOR NEXT