தமிழகம்

சீமான், அவரது மனைவிக்கு ரூ.3.74 கோடி சொத்துகள்!

செய்திப்பிரிவு

காரைக்குடி தொகுதி வேட்பாளரான நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். தனக்கும், தனது மனைவிக்கும் ரூ.3.74 கோடி சொத்துகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

அதன் விவரம்: சீமானுக்கு கையிருப்பு ரூ.50,000, வங்கியிருப்பு ரூ.7.72 லட்சம், ரூ.12 லட்சம் மதிப்புள்ள கார், ரூ.19.50 லட்சம் மதிப்புள்ள 150 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.39.81 லட்சம் அசையும் சொத்துகள் உள்ளன.

          

மொத்தக் கடன் ரூ.5.11 லட்சம். மேலும், அவர் மீது 24 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால், எந்த வழக்குகளிலும் தண்டனை பெறவில்லை. அவரது மனைவிக்கு கையிருப்பு ரூ.35,000, வங்கி இருப்பு ரூ.5.27 லட்சம், பங்கு முதலீடு ரூ.3.50 லட்சம், ரூ.25 லட்சம் மற்றும் ரூ.4 லட்சம் மதிப்புள்ள 2 கார்கள், ரூ.2.08 கோடி மதிப்புள்ள 1,600 கிராம் தங்கம் என மொத்தம் ரூ.2.57 கோடி அசையும் சொத்துகள் உள்ளன.

மேலும், ரூ.51 லட்சம் மதிப்புள்ள 25.45 ஏக்கர் வேளாண் நிலம், ரூ.36 லட்சம் மதிப்புள்ள 10 ஏக்கர் வேளாண் இல்லாத நிலம் என ரூ.87 லட்சம் மதிப்புள்ள அசையா சொத்துகள் உள்ளன. மொத்தக் கடன் ரூ.18.29 லட்சம். சீமானுக்கும், அவரது மனைவிக்கும் சேர்த்து மொத்தம் ரூ.3.74 கோடி சொத்துகள் உள்ளன.

SCROLL FOR NEXT