தமிழகம்

சென்னையில் 2-வது விமான நிலையம் அமைக்க செய்யூர், கும்மிடிப்பூண்டி இடங்கள் தேர்வு

செய்திப்பிரிவு

சென்னை: சென்​னை​யில் 2-வது விமான நிலை​யம் அமைக்க பரந்​தூர் திட்​டம் கைவிடப்​பட்ட நிலை​யில், செய்​யூர் மற்​றும் கும்​மிடிப்​பூண்டி ஆகிய பகு​தி​களை அரசு தேர்வு செய்​துள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது.

சென்னை மீனம்​பாக்​கத்​தில் சர்​வ​தேச விமான நிலை​யம் நூற்​றாண்டை கடந்து இன்​றும் செயல்​பாட்​டில் இருந்து வரு​கிறது. தினசரி 50 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்ட பயணி​கள் உள்​நாட்டு மற்​றும் வெளி​நாட்டு விமான சேவையைப் பயன்​படுத்தி வரு​கின்​றனர். பயணி​களின் எண்​ணிக்கை அதி​கரித்து வரு​வ​தால், கடந்த சில ஆண்​டு​களாக மீனம்​பாக்​கம் விமான நிலை​யம் இடநெருக்​கடியைச் சந்​தித்து வரு​கிறது.

இதன் காரண​மாகப் புதிய சர்​வ​தேச விமான நிலை​யம் கட்​டு​வதற்​குக் கடந்த ஆட்​சி​யில் காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள பரந்​தூர் இடம் தேர்வு செய்​யப்​பட்​டது. அதற்கு மத்​திய அரசும் ஒப்​புதல் அளித்​தது. அதற்​காக 90 சதவீதம் வரை நில​மும் கையகப்​படுத்​தப்​பட்​டது. ஆனால், விமான நிலை​யம் அமைக்க எதிர்ப்பு தெரி​வித்து கடந்த ஆண்டு பரந்​தூர் மக்​கள் போராட்​டத்​தில் ஈடு​பட்​டனர். அவர்​களைத் தவெக தலை​வர் விஜய் நேரில் சந்​தித்து ஆதரவு தெரி​வித்​தார்.

அதன்​பின் தமிழகத்​தில் ஆட்சி மாற்​றம் ஏற்​பட்டு முதல்​வ​ராக விஜய் பதவி​யேற்​றார். இதையடுத்​து, சட்​டப்​பேர​வைக் கூட்​டத்​தொடரில் பரந்​தூரில் விமான நிலை​யம் அமைக்​கும் முடிவு கைவிடப்​படு​வ​தாக 110 விதி​யின் கீழ் முதல்​வர் விஜய் அறி​வித்​தார். இது மக்​களிடையே பெரும் வரவேற்பைப் பெற்​றது.

அதேவேளை​யில் சென்​னை​யில் 2-வது புதிய விமான நிலை​யம் அமைக்​கும் இடங்​களைத் தமிழ்​நாடு தொழில் வளர்ச்சி கழகத்​தின் (டிட்​கோ) அதி​காரி​கள் ஆய்வு செய்​தனர். முதல் கட்​ட​மாக ஆய்வு செய்து செய்​யூர் மற்​றும் கும்​மிடிப்​பூண்டி ஆகிய இடங்​களை அதி​காரி​கள் தேர்வு செய்​துள்​ள​தாகத் தகவல் வெளி​யாகி உள்​ளது. எனினும் அந்த இடங்​களில் விமான நிலை​யம் அமைப்​ப​தில் சில சிக்​கல்​கள் இருப்​ப​தாகக் கூறப்​படு​கிறது.

செங்​கல்​பட்டு மாவட்​டத்​தில் உள்ள செய்​யூர் பகு​தி​யில் இருந்து 20 கி.மீ. தொலை​வில்​தான் வேடந்​தாங்​கல் பறவை​கள் சரணால​யம் உள்​ளது. இந்த வான்​வெளி பரப்பு தாம்​பரம் ஏர் போர்ஸ் ஸ்டேஷன் கட்​டுப்​பாட்​டில் வரு​கிறது. இது​மட்​டுமின்​றி, கல்​பாக்​கத்​தில் இருந்து 30 கி.மீ. தூரத்​தில் அந்த வான்​வெளி பரப்பு இருக்​கிறது. எனவே அனு​மதி கிடைப்​பது சாத்​தி​யமில்​லாத ஒன்​றாக உள்​ளது. மேலும் சென்​னை​யில் இருந்து செய்​யூர் 100 கி.மீ. தூரத்​தில் இருப்​ப​தால் பயணி​களுக்​குப் போக்​கு​வரத்து சிரமங்​கள் இருக்​கும் என்று கூறப்​படு​கிறது.

இதே​போல், ஆந்​திர மாநிலம் திருப்​பதி மாவட்​டத்​தில் உள்ள ஸ்ரீ ஹரி​கோட்​டா​வில் இருந்து சுமார் 50 கி.மீ. தூரத்​தில் கும்​மிடிப்​பூண்டி உள்​ளது. இதன் அரு​கில் பழவேற்​காடு பாது​காக்​கப்​பட்ட சூழலியல் மண்​டலம் இருக்​கிறது. எனவே, பெரிய அளவில் நிலம் கிடைப்​பது இங்​கும் சாத்​தி​யமில்​லாத ஒன்​றாக உள்​ளது.

தற்​போது தேர்ந்​தெடுக்​கப்​பட்​டுள்ள இந்த இடங்​களில் நேரில் ஆய்வு மேற்​கொள்ள மத்​திய அரசுக்​குத் தமிழக அரசு கடிதம் எழுதி இருப்​ப​தாக தகவல்​கள் தெரிவிக்​கின்​றன. இதில் இந்​திய விமான நிலைய ஆணை​யத்​தின் விரி​வான சாத்​தி​யக்​கூறு ஆய்வு அறிக்​கை, பாது​காப்பு மற்​றும் சுற்​றுச்​சூழல் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களின் அனு​ம​தி​கள் ஆகியற்​றுக்​குப் பின்​னரே திட்​டத்​தின் அடுத்த கட்ட நடவடிக்​கைகள் எடுக்​கப்​படும் என அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

பெரு​மளவி​லான விவ​சாய நிலங்​கள் பாதிக்​கப்​ப​டாத வகை​யில் திட்​டங்​கள் நிறைவேற்​றப்​படும் என்று தமிழக முதல்​வர் விஜய் அறி​வித்​துள்ள நிலை​யில், புதிய விமான நிலை​யத்​துக்​காக எவ்​வளவு ஏக்​கர் நிலம் கையகப்​படுத்​தப்​படும். எத்​தனை நீர்​நிலைகள் பாதிக்​கப்​படும் போன்ற பல கேள்வி​கள் எழுந்​துள்​ளன. தற்​போது இருக்​கும் அதே அரசி​யல் மற்​றும் பொது​மக்​களின் ஆதர​வைத் தக்க வைத்​துக்​கொண்டே இத்​திட்​டத்​தைக் கொண்டு செல்​வது​தான் தவெக அரசுக்கு இருக்​கும் சவாலாகும்.

அதே​போல், விமான நிலை​யம் மக்​கள் பயன்​பாட்​டுக்கு வர 5 முதல் 7 ஆண்​டு​கள் வரை ஆகும் என டிட்கோ அதி​காரி​கள் தரப்​பில் தெரிவிக்​கப்​படு​கிறது. அதேவேளை​யில் தேர்வு செய்​யப்​பட்​டுள்ள 2 இடங்​களில் ஒன்று தேர்​தெடுக்​கப்​பட்​டாலும், அந்த மாவட்​டத்​தின் வளர்ச்சி பன்​மடங்கு பெரு​கும். விமான நிலை​யத்​தைச் சார்ந்த உற்​பத்​தி, சரக்​குப் போக்​கு​வரத்து மற்​றும் தொழில் நிறு​வனங்​கள் வளர்ச்சி அதி​கரிக்​கக் கூடும். இதன் மூலம் உள்​ளூர் இளைஞர்​களுக்கு வேலை​வாய்ப்​பு​கள் எளி​தில் கிடைக்​கும் சூழல் உரு​வாகும். நிலங்​களின் மதிப்பு உயர்​வதன் மூலம்​ ரியல்​ எஸ்​டேட்​ துறை​யும்​ வளர்ச்​சி பெறும்​ என எ​திர்​ப்​பார்​க்​கப்​படுகிறது.

SCROLL FOR NEXT