தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தின் போது கைது

 

படங்கள்: எல். சீனிவாசன் 

தமிழகம்

சென்னையில் போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள் கைது!

தமிழினி

சென்னை: திமுக அரசுக்கு எதிரான போராட்டங்கள் வலுத்துள்ள நிலையில், ‘சமவேலைக்கு சமஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் இன்று (டிச., 27) கைது செய்​யப்​பட்​டனர்.

அரசு மற்​றும் அரசு உதவி​ பெறும் பள்​ளி​களில் 31.5.2009-ல் பணியில் உள்ள இடைநிலை ஆசிரியர்​களுக்​கும் அதற்கு பின்​னர் பணி​யில் சேர்ந்​தவர்​களுக்​கும் அடிப்​படை சம்​பளத்​தில் பெரிய அளவில் வேறு​பாடு இருந்து வரு​கிறது. ஊதிய முரண்​பாட்டை கண்​டித்து சமவேலைக்கு சமஊ​தி​யம் என்ற கோரிக்​கையை வலியுறுத்தி நீண்ட கால​மாக போராடி வரு​கின்​றனர்.

தூய்மைப்பணியாளர்கள்

இந்​நிலை​யில், நேற்று (டிச.26) காலை 10.30 மணிக்கு தொடக்​கக் கல்வி இயக்​குநர் உள்​ளிட்ட கல்​வித்​துறை அலு​வல​கங்​கள் அமைந்துள்ள டிபிஐ வளாகத்தை முற்​றுகை​யிட்டு போராட்​டம் நடத்​தினர். அவர்​களை போலீ​ஸார் குண்டுக்கட்டாகத் தூக்கி போலீஸ் வாக​னங்​களில் ஏற்​றினர்.

இதனைத் தொடர்ந்து, இரண்டாவது நாளாக ‘சமவேலைக்கு சம ஊ​தி​யம்’ வழங்​கக்​கோரி இன்று (டிச., 27) சென்னை எழும்பூரில் உள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தை முற்​றுகை​யிட்ட இடைநிலை ஆசிரியர்கள் கைது செய்​யப்​பட்​டனர்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்: மேலும், திமுக அரசுக்கு எதிரான போரட்டங்கள் வெடித்துள்ள நிலையில், தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும், ஊதிய உயர்வு மற்றும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி சென்னை பாரிமுனையில் தூய்மைப் பணியாளர்கள் சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டம் செய்தனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. பின்னர் தூய்மைப் பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT