கோப்புப் படம்

 
தமிழகம்

அரசிடம் நிரந்தர அங்கீகாரம் பெற்றுத் தருவதாக ரூ.200 கோடி வரை மோசடி: 50-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் விசாரணை

தலைமறைவான முன்னாள் எம்எல்ஏவைக் கைது செய்ய தீவிரம்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் தனியார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கட்​டிடம் கட்ட திட்ட அனு​மதி உள்​ளிட்​ட​வற்றை அரசிடம் இருந்து பெற்​றுத் தரு​வ​தாக ரூ.200 கோடி வரை மோசடி நடை​பெற்​ற​தாக பரபரப்பு குற்​றச்​சாட்டு எழுந்​துள்​ளது. இதுதொடர்​பாக சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​களிடம் தீவிர விசா​ரணை நடத்​தினர்.

சென்னை தி.நகரில் செயல்​பட்டு வரும் தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களின் கூட்​டமைப்பு சார்​பில், பி.டி.அரசகு​மார் மீது சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் சமீபத்​தில் புகார் அளிக்​கப்​பட்​டது. அந்த புகாரில், ‘‘தமிழகம் முழு​வதும் உள்ள தனி​யார் பள்​ளி​களுக்கு நிரந்தர அங்​கீ​காரம், பள்​ளி​களின் தரம் உயர்​வு, கூடு​தல் வகுப்​பறை​கள் அமைக்க அனு​ம​தி, கட்​டிட திட்ட ஒப்​புதல் உள்​ளிட்ட பல்​வேறு அரசு அனு​ம​தி​களை விரை​வாக பெற்​றுத் தரு​வ​தாக உறு​தி​யளித்து சுமார் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி செய்​துள்​ளார்’’ என்று குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கினர். விசா​ரணை​யின் அடிப்​படை​யில், இந்த வழக்​கில் தொடர்​புடைய​தாகக் கூறப்​படும் திமுக செய்​தித் தொடர்​புக் குழுத் துணைத் தலை​வ​ராக இருந்த பி.டி.அரசகு​மார் கடந்த 27-ம் தேதி கைது செய்​யப்​பட்​டார்.

பின்​னர் அவர் நீதி​மன்றத்​தில் ஆஜர்​படுத்​தப்பட்​டு, நீதி​மன்ற காவலில் புழல் சிறை​யில் அடைக்​கப்​பட்​டார். இந்த மோசடி​யில் முன்​னாள் எம்​எல்ஏ ஒரு​வர் உட்பட மேலும் சிலருக்கு தொடர்பு இருப்​ப​தாக விசா​ரணை​யில் தெரிய வந்துள்​ளது. தலைமறை​வாக உள்ள முன்​னாள் எம்​எல்​ஏ​வைத் தனிப்​படை போலீ​ஸார் தீவிர​மாகத் தேடி வரு​கின்​றனர்.

இதற்​கிடை​யில், சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் வெளி​யிட்​டுள்ள அறி​விப்​பில், ‘‘தனி​யார் பள்​ளி​களுக்கு அரசு அங்​கீ​காரம் மற்​றும் பல்​வேறு அனு​ம​தி​களைப் பெற்​றுத் தரு​வ​தாகக் கூறி சுமார் ரூ.100 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​பது முதற்​கட்ட விசா​ரணை​யில் தெரிய வந்​துள்​ளது’’ என்று உறு​திப்​படுத்தி உள்​ளார்.

இந்த வழக்​கில் தொடர்​புடைய மற்ற குற்​ற​வாளி​களைக் கண்​டறிவது, பணப் பரிவர்த்​தனை​களை ஆய்வு செய்​வது மற்​றும் கூடு​தல் சாட்​சி​யங்​களைச் சேகரிப்​பது போன்ற பணி​கள் தொடர்ந்து நடை​பெற்று வரு​வ​தாக​வும் அவர் கூறி​யுள்​ளார். இந்த மோசடி​யால் பாதிக்​கப்​பட்ட தனி​யார் பள்ளி நிர்​வாகி​கள் சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கம் அல்​லது சென்னை மத்​திய குற்​றப்​பிரிவு அலு​வல​கத்தை நேரில் அணுகி அல்​லது தொலைபேசி மூலம் புகார் அளிக்​கலாம். புகார்​தா​ரர்​களின் அடை​யாளம் மற்​றும் விவரங்​கள் ரகசி​ய​மாக வைக்​கப்​படும் என்​று சென்னை காவல் ஆணை​யர் அமல்​ராஜ் உறுதி அளித்​துள்​ளார்.

இதையடுத்​து, பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த பள்ளி நிர்​வாகி​கள் தொடர்ந்து புகார் அளித்து வரு​கின்​றனர். போலீ​ஸார் நடத்​திய விரி​வான விசா​ரணை​யில், தமிழகம் முழு​வதும் உள்ள பல்​வேறு மாவட்​டங்​களைச் சேர்ந்த தனி​யார் பள்​ளி​களிடம் ரூ.25 லட்​சம் முதல் ரூ.3 கோடி வரை வசூலிக்​கப்​பட்​டிருப்​ப​தாகத் தகவல்​கள் வெளி​யாகி​யுள்​ளன. இதனால், இந்த மோசடி​யில் சிக்​கி​யிருக்​கும் மொத்த தொகை ரூ.200 கோடியைத் தாண்ட கூடும் என்ற சந்​தேகம் விசா​ரணை அதி​காரி​களுக்கு ஏற்​பட்​டுள்​ளது.

இது​வரை 50-க்​கும் மேற்​பட்ட தனி​யார் பள்​ளி​களின் நிர்​வாகி​களிடம் போலீ​ஸார் தனித்​தனி​யாக விசா​ரணை நடத்தி வாக்​குமூலங்​களைப் பதிவு செய்​துள்​ளனர். மேலும், மாவட்ட வாரி​யாகப் பாதிக்​கப்​பட்ட பள்​ளி​களின் முழு​மை​யான பட்​டியலை சமர்ப்​பிக்​கு​மாறு சம்​பந்​தப்​பட்ட தனி​யார் பள்​ளி​கள் சங்​கங்​களுக்​கும் போலீ​ஸார் அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

இந்த மோசடி தொடர்​பாக மேலும் பலர் புகார் அளிக்க முன்​வரக் கூடும் என்​ப​தால், வழக்​கின் பரி​மாணம் இன்​னும் விரிவடை​யும். எனவே, பணப் பரிவர்த்​தனை​கள், வங்​கிக்கணக்கு விவரங்​கள் மற்​றும் தொடர்​புடைய ஆவணங்​களை ஆய்​வு செய்​து போலீ​ஸார்​ வி​சா​ரணை​யைத்​ தீவிரப்​படுத்​தி உள்​ளனர்​.

SCROLL FOR NEXT