தமிழகம்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான மதிப்பெண் 5 சதவீதம் குறைப்பு: பள்ளிக்கல்வித் துறை

செய்திப்பிரிவு

சென்னை: பள்​ளி​களில் 1 முதல் 8-ம் வகுப்புவரை பணி​யாற்​றும் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்​ட​தாரி ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தகு​தித் தேர்வு (டெட்) தேர்ச்சி கட்​டாய​மாக்​கப்​பட்​டுள்​ளது.

மொத்​தம் 150 மதிப்​பெண்​கள் கொண்ட டெட் தேர்​வில் தேர்ச்சி பெற பொதுப் பிரி​வினர் 60 சதவீத மதிப்​பெண்​ணும் (90), இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினர் 55 சதவீத​மும் (82) எடுக்க வேண்​டும்.

          

இந்​நிலை​யில், ஆந்​தி​ரா, தெலங்​கா​னா, ஒடிசா மாநிலங்​களைப் பின்​பற்றி தமிழகத்​தி​லும் இடஒதுக்​கீட்​டுப் பிரி​வினருக்கு டெட் தேர்ச்சி மதிப்​பெண் 5 சதவீதம் குறைக்​கப்​பட்​டு, அதற்​கான அரசாணை நேற்று வெளி​யிடப்பட்​டது.

இது தொடர்​பாக பள்​ளிக்​கல்​வித் துறைச் செயலர் ப.சந்திரகன் வெளி​யிட்​டுள்ள அரசாணை​யில் “டெட் தேர்ச்சி மதிப்​பெண் பிசி, பிசி-​முஸ்​லிம், எம்​பிசி, டிஎன்​சி, மாற்​றுத் திற​னாளி​கள் ஆகிய பிரி​வினருக்கு 50 சதவீத​மாக​வும் (75) எஸ்​சி, எஸ்டி வகுப்​பினருக்கு 40 சதவீத​மாக​வும் (60) நிர்​ண​யிக்​கப்​படுகிறது.

கடந்த நவம்​பரில் நடத்​தப்பட்ட டெட் தேர்​வுக்​கும் இந்த 5 சதவீத மதிப்​பெண் குறைப்பு அரசாணை பொருந்​தும்” என்று தெரி​வித்​துள்​ளார்​.

SCROLL FOR NEXT