வெடிவிபத்து |கோப்பு படம்

 
தமிழகம்

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: அமைச்சரின் சகோதரி உள்பட 4 பேர் மீது வழக்குப் பதிவு

இ.மணிகண்டன்

சாத்தூர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் நேற்று வெடி விபத்து ஏற்பட்டு தொழிலாளி ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக ஆலை உரிமையாளரான அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி உள்ளிட்ட 4 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆலை மேலாளர் கைதுசெய்யப்பட்டார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே ஒத்தையால் கிராமத்தில் பட்டாசு ஆலையில் நேற்று ஏற்பட்ட வெடி விபத்தில் மாடசாமி என்ற தொழிலாளி உயிரிழந்தார்.

இந்த விபத்து குறித்து கிராம நிர்வாக அலுவலர் சண்முகராஜ் அளித்த புகாரின் பேரில், பட்டாசு ஆலை உரிமையாளர்களான சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசுவின் சகோதரி ஜெயசக்தி, அவரது மகள் செல்வமாரி, செல்வமாரியின் கணவர் முரளீஸ்வரன், ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷ் ஆகிய 4 பேர் மீது சாத்தூர் தாலுகா போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

ஆலை மேலாளர் சூர்ய பிரகாஷை போலீஸார் இன்று கைது செய்தனர்ர். மற்ற 3 பேரையும் போலீஸார் தேடி வருகின்றனர்.

பட்டாசு ஆலையில் வேலை செய்யும் நபர்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதேபோல், அதிகப்படியான பட்டாசுகளை உற்பத்தி செய்ய சொல்லி தொழிலாளர்கள் வற்புறுத்தப்பட்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் இவ்வாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.

SCROLL FOR NEXT