கோப்புப் படம்

 
தமிழகம்

தமிழகத்தில் ரூ.4,730 கோடி மணல் கொள்ளை: எஃப்ஐஆர் பதியுமாறு லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிமுக புகார்

செய்திப்பிரிவு

சென்னை: தமிழகத்தில் ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்று லஞ்ச ஒழிப்புத் துறையில் அதிமுக புகார் கொடுத்துள்ளது.

இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறையில் அதிமுக சட்டப் பிரிவுஇணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன் கொடுத்துள்ள புகார்கடிதத்தில் கூறப்பட்டிருப்பதா வது: தமிழக மணல் குவாரிகளில் மிகப்பெரிய அளவில் சட்டவிரோத நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளன. அமலாக்கத் துறை கடந்த 2024 ஜூன் 13-ம் தேதி அனுப்பிய அதிகாரப்பூர்வ ஆவணங்களின் அடிப்படையில் இது உறுதியாகியுள்ளது.

அதாவது, தமிழகத்தில் கடந்த 2021 முதல் 2023 வரை 28 குவாரிகளில் மணல் அள்ளும் ஒப்பந்தங்கள் வழங்கப்பட்டன. இதில் சில குறிப்பிட்ட ஒப்பந்ததாரர்களுக்கு சாதகமாக அதிகாரிகள் செயல்பட்டுள்ளனர். சுரங்க விதிகள் மற்றும் மத்திய அரசின் வழிகாட்டுதல்களில் விதிமீறல் நடந்துள்ளது. இதற்கு துறை அதிகாரிகளும் உடந்தை. அந்த வகையில், ஆற்றங்கரை மணல், ஜல்லி மற்றும் கல் குவாரிகளில் கூடுதல் கட்டணம் வசூலித்ததை அமலாக்கத் துறைஉறுதி செய்துள்ளது.

கான்பூர் ஐஐடி தொழில்நுட்பக் குழுவினர்ட்ரோன்கள் மூலம் நடத்திய ஆய்வில், அனுமதிக்கப்பட்ட அளவை விட 21 மடங்கு அதிகமாக மணல்எடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதனால், அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் முடக்கப்பட்டு, தனியார் ஒப்பந்ததாரர்களுக்கு பலன் கிடைத்துள்ளது. குவாரிகளில் விதிகளை மீறி 24 மணி நேரமும் மணல் அள்ளப்பட்டது ஜிபிஎஸ் தரவுகள் மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

வெறும் 5 ஹெக்டேர் பரப்பில் மணல் எடுக்க அனுமதி பெற்றுவிட்டு, சட்டவிரோதமாக 987 ஹெக்டேர் பரப்பில் மணல் அள்ளப்பட்டுள்ளது. தமிழக அரசின் கணக்குகளில் மணல் விற்பனை மூலம் ரூ.36.45 கோடி மட்டுமே வருவாய் காட்டப்பட்டுள்ளது. உண்மையில், ரூ.4,730 கோடி மதிப்பிலான மணல் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது.

இந்த மெகா ஊழலில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், துறையின் முதன்மைப் பொறியாளர், மணல் குவாரி கண்காணிப்பு பிரிவு அதிகாரிகள் மற்றும் குறிப்பிட்ட சில தனியார்ஒப்பந்ததாரர்களும் சம்பந்தப்பட்டுள்ளனர். இந்த ஊழல் தொடர்பாக உடனடியாக முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட வேண்டும். தாமதம் செய்தால் ஆதாரங்கள் அழிக்கப்பட வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT