தமிழகம்

திமுக வெற்றிக்காக நேரடிக் களத்துக்கு வந்த சபரீசன் - ராஜ்யசபாவுக்கு அனுப்ப ராஜபாட்டை தயாராகிறதா?

அ.அருள்தாசன்

இந்​தத் தேர்​தலில் திமுக-​வின் வெற்​றிக்​காக முதல்​வர் ஸ்டா​லினின் மரு​மகன் சபரீசன் தனி டிராக்​கில் களப்​பணி​யாற்றி வரு​கி​றார்.

சபரீசனின் ‘பென்’ நிறு​வனப் படை​யினர் உடனுக்​குடன் சர்​வேக்​களை எடுத்து திமுக-​வின் சாதக பாதகங்​களை சமர்ப்​பித்து வரு​கி​றார்​கள். சோஷியல் மீடி​யா​வில் ஆக்​டி​வாக அதி​க​மான ஃபாலோயர்​களு​டன் இயங்​கும் பிரபல்​ய​மான முகங்​களுக்கு ‘தேவை​யான’ கன்​டென்ட்களைக் கொடுத்து கருப்பு - சிவப்பு சாயல் வராத அளவுக்கு அவர்​களை திமுக-வுக்கு ஆதர​வாகப் பேசவைப்​ப​தில் பெரும்​பங்காற்​றுகிறது ‘பென்’ டீம். வேட்​பாளர் தேர்​விலும் இவர்​களின் ‘பேக் வொர்க்’ இம்​முறை பிர​தான​மாக இருக்​கும் என்​கி​றார்​கள்.

          

இந்த நிலை​யில், இத்​தனை நாளும் சென்​னை​யில் இருந்து கொண்டு தனது பரி​வாரங்​களை மாநிலம் முழுக்க இயக்கி வந்த சபரீசன், தற்​போது நேரடி​யாகவே களத்​துக்கு வந்து கட்​சி​யின் முக்​கிய பிர​முகர்​களைச் சந்​தித்து கள நில​வரம் குறித்து ஆலோ​சனை நடத்தி வரு​கி​றார். கட்​சி​யினர் மட்​டுமல்​லாது, அந்​தந்​தப் பகு​தி​யில் மெஜாரிட்​டி​யாக இருக்​கும் சமூகங்​களைச் சார்ந்த முக்​கிய பிர​முகர்​களை​யும் சந்​தித்​துப் பேசி திமுக-வுக்​காக ஆதரவு திரட்டி வரு​கி​றார் சபரீசன்.

சபரீசனுக்கு பூர்வி​கம் திருநெல்​வேலி மாவட்​டம் அரிய​நாயகபுரம் கிரா​மம். இங்​குள்ள வீட்​டில் தான் தென் மாவட்ட திமுக நிர்​வாகி​களை அவ்​வப்​போது சந்​தித்து அவர் ஆலோ​சனை நடத்​து​வார். ஆனால், இது தேர்​தல் நேரம் என்​ப​தால் மாவட்ட திமுக அலு​வல​கத்​துக்கே விசிட் அடித்து கட்சி நிர்​வாகி​களு​டன் ஒன் டு ஒன் சந்​திப்​பு​களை அவர் நடத்தி வரு​வது பேசுபொருளாகி இருக்​கிறது.

தென் மண்டல திமுக பொறுப்​பாள​ரான கனி​மொழி தனது மண்​டலத்​தில் திமுக-​வின் வெற்​றிக்​காக கடுமை​யாக உழைத்து வரு​கி​றார். அதற்​காக இவரும் அடிக்​கடி திமுக நிர்​வாகி​களைச் சந்​தித்​துப் பேசி வரு​கி​றார். இந்த நிலை​யில் சபரீசனும் நேரடி​யாகக் களத்​துக்கு வந்து கருத்​துக் கேட்க ஆரம்​பித்​திருப்​பது திமுக-​வினர் மத்​தி​யில் விவாதப் பொருளாகி இருக்​கிறது.

இது குறித்து நம்​மிடம் பேசிய நெல்லை மாவட்ட திமுக மூத்த நிர்​வாகி ஒரு​வர், “இந்​தத் தேர்​தல் திமுக-வுக்கு மிக முக்​கிய​மான ஒன்​று. அதனால் தான் ஒட்​டுமொத்த தலை​வர் குடும்​ப​மும் ஆளுக்​கொரு திசை​யில் பம்​பர​மாக சுற்​றுகி​றார்​கள். அந்த வகை​யில், கன்​னி​யாகுமரி, திருநெல்​வேலி, தூத்​துக்​குடி மாவட்​டங்​களில் கட்​சி​யினரு​டான ஒன் டு ஒன் சந்​திப்பை சபரீசன் நடத்தி இருக்​கி​றார். தனது விசிட்​டின் போது, தொகு​திப் பார்​வை​யாளர்​கள், மாவட்ட, ஒன்​றிய நிர்​வாகி​களை தொகுதி வாரி​யாக சந்​தித்​துப் பேசி வரு​கி​றார்” என்​றார்.

2021 தேர்​தலில் தமி​ழ​கம் முழு​வதும் தீவிரப் பிரச்​சா​ரம் மேற்​கொண்​ட உதயநி​திக்கு பரி​சாக அமைச்சரவையில் இடமளிக்​கப்​பட்​டது. 2024 மக்​கள​வைத் தேர்​தலில் திமுக கூட்​டணி அனைத்​துத் தொகு​தி​களி​லும் வெற்​றி​பெற்​றதை அடுத்து துணை முதல்​வர் அந்​தஸ்​தும் உதயநி​தி​யைத் தேடி வந்​தது. அதே​போல், இது​வரை திரை மறை​விலேயே செயல்​பட்டு வந்த சபரீசன் இம்​முறை நேரடி​யாகவே களத்​துக்கு வந்​திருப்​பதை அடுத்து அவரும் அதி​காரத்​துக்கு வரலாம் என்ற பேச்​சுகள் இப்​போதே வலம் வரத் தொடங்​கி​விட்​டன. அடுத்​த​தாக திமுக சார்​பில் ராஜ்யசபாவுக்கு அனுப்​பப்​படும் நபர்​களில் சபரீசனும் ஒரு​வ​ராக இருக்​கலாம் என்​றொரு செய்தி நீண்ட நாட்​களாகவே அறி​வால​யத்​தை வட்​ட​மிடு​வது குறிப்​பிடத்தக்​கது.

SCROLL FOR NEXT