தமிழகம்

“விஜய்க்கு கிடைத்தது வரலாற்று வெற்றி” - தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் மகிழ்ச்சி

செய்திப்பிரிவு

சென்னை/ திருத்தணி: தேர்​தலில் விஜய்க்கு கிடைத்​திருப்​பது வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்றி என்று அவரது தந்​தை​யும், இயக்​குநரு​மான எஸ்​.ஏ.சந்​திரசேகரன் தெரி​வித்​துள்​ளார்.

தமிழக சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் விஜய்​யின் தவெக அதிக தொகு​தி​களில் வெற்றி பெற்​றுள்​ளது. இந்​நிலை​யில், விஜய்​யின் தந்​தை​யும், இயக்​குநரு​மான எஸ்​.ஏ.சந்​திரசேகரன் நேற்று வாக்கு எண்​ணிக்கை தொடங்​கு​வதற்கு முன்​பு, காலை 6.30 மணி அளவில் திருத்​தணி முரு​கன் கோயிலுக்கு வந்​தார்.

மூல​வர் சுப்​பிரமணிய சுவாமி, உற்​சவர் சண்​முகர், ஆபத்​ச​காய விநாயகர், வள்​ளி, தெய்​வானை ஆகிய சந்​நி​தி​களில் சிறப்பு பூஜைகள் நடத்​தி, சுவாமி தரிசனம் செய்​தார். பின்​னர், கோயில்வளாகத்​தில் அமர்ந்து 10 நிமிடம் தியானத்​தில் ஈடு​பட்​டார். கோயில் நிர்​வாகம் சார்​பில் அவருக்கு மாலை அணிவிக்​கப்​பட்​டு, பிர​சாதங்​கள் வழங்​கப்​பட்​டன.

கோயில் வளாகத்​தில் செய்​தி​யாளர்​களிடம் பேசிய அவர், ‘‘அனை​வரும் நன்​றாக இருக்க வேண்​டும். நாடு நன்​றாக இருக்க வேண்​டும்’’ என்​றார். பிறகு, கோ​யில் தேர் வீதி​யில் இருந்த மாற்​றுத் திற​னாளி​களுக்கு காலை சிற்​றுண்​டி, நிதி​யுதவி அளித்​து​விட்​டு, சென்​னைக்கு திரும்​பி​னார். பின்னர் எஸ்​.ஏ.சந்​திரசேகரன் கூறிய​தாவது: விஜய் கடந்த 2 ஆண்​டு​களாக தமிழகத்​தின் முதல்​வ​ராக வரு​வேன் என்ற நம்​பிக்​கை​யுடன் இருந்​தார்.

அந்த மனப்​பான்​மை​யைப் பாராட்​டு​கிறேன். எந்த கூட்​ட​ணி​யும் இன்றி தனித்​து​தான் நிற்​பேன் என ஒரு தலை​வ​ராக அவரது துணிச்​சல் போற்​று​தலுக்கு உரியது. இது வரலாற்​றுச் சிறப்​புமிக்க வெற்​றி. அவருக்​குக் கிடைத்த வரலாற்று வெற்​றி​யாகவே இதைப் பார்க்​கிறேன். ஒரு தந்​தை​யாக, நான் மிகுந்த பெரு​மை​யும், மகிழ்ச்​சி​யும் அடைகிறேன். என் மகனுக்கு வாழ்த்​துகள். இவ்​வாறு அவர் கூறி​னார்.

சென்​னை​யில் உள்ள விஜய் இல்​லத்​தில், அவரது தந்தை எஸ்​.ஏ.சந்​திரசேகரன், தாய் ஷோபா மற்​றும் அவரது குடும்​பத்​தினர் அனை​வரும் தவெக வெற்​றியை மகிழ்ச்​சி​யுடன் கொண்​டாடினர். விஜய் படத்​தின் பாடலை அனை​வரும் பாடி​யும், விசில் அடித்​தும் அவர்​கள் கொண்​டாடிய வீடியோ இணை​யத்​தில்​ வைரலாகி வருகிறது.

SCROLL FOR NEXT