மதுரை மாநகரப் பகுதியில் மழை வெள்ளத்தால் மிக மோசமாக சேதமடைந்த சாலைகள் உட்பட மொத்தம் 979 சாலைகள், ரூ.100 கோடியில் அமைக்கப்படுகின்றன. ஆணையர் சித்ராவின் இந்த களுக்கு விடிவுகாலம் நடவடிக்கையால் ஓர் ஆண்டாக மோசமாக காணப்பட்ட சாலை கிடைக்கப் போவதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந் துள்ளனர்.
மதுரை மாநகராட்சியின் 100 வார்டுகளிலும் முல்லை பெரியாறு குடிநீர் திட்டம், விரிவாக்கம் செய்யப்பட்ட வார்டுகளில் புதிய பாதாள சாக்கடை திட்டம் போன்றவை ஒரே நேரத்தில் நடந்தன. இப்பணிகள் நடந்து கொண்டிருக்கும்போதே, கோடை மழை, தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகியவற்றால், சாலைகளை பராமரிப்பதிலும், திட்டமிட்டபடி குடிநீர் திட்டம், புதிய பாதாள சாக்கடை திட்டங்களை நிறை வேற்றுவது மாநகராட்சி நிர்வாகத்துக்கு சவாலாக இருந்தது. பொதுமக்களும் பழுதடைந்த சாலைகளில் செல்வதற்கு மிகுந்த சிரமம் அடைந்தனர்.
கடந்த டிசம்பரில் முல்லை பெரியாறு குடிநீர் திட்டத்தை முதல்வர் தொடங்கிவைப்பதாக இருந்ததால் ஆணையர் சித்ரா, அப்பணியை எடுத்த ஒப்பந்த நிறுவனங்களை இரவு, பகலாக முடுக்கிவிட்டு திட்டமிட்டபடி துரிதமாக முடித்து திறப்பு விழா கண்டு, தற்போது பொதுமக்களுக்கு குடிநீர் தடையின்றி கிடைக்கிறது. புறநகரில் விரிவாக்கம் செய்த வார்டுகளிலும் பாதாள சாக்கடை திட்டம் நிறைவுபெற்று வீடுகள்தோறும் இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த 2 பெரிய திட்டப் பணிகளால் சேதமான மாநகர சாலைகள், அடுத்தடுத்த மழையால் சேதமடைந்த மிக மோசமான சாலைகளை மறுசீரமைக்க ஆணையர் சித்ரா நடவடிக்கை எடுத்தார்.
அவரது உத்தரவின் பேரில் மண்டலம் வாரியாக பொறியியல் பிரிவு அதிகாரிகள் சேதமடைந்த சாலைகளை கணக்கெடுத்தனர். அவற்றை புதுப்பிப்பதற்கு ஆணையர் சித்ரா முயற்சியில், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் புதிய சாலைகள் போடுவதற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி பொறியியல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில், மதுரை மாநகரில் சேதமடைந்த சாலைகளை மறுசீரமைக்கவும், பராமரிக்க வும் டூரிப் திட்டத்தில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசின் பங்களிப்பாக ரூ.65 கோடியும்,மாநகராட்சியின் பங்களிப்பாக பொதுநிதியில் இருந்து ரூ.35 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. 100 வார்டுகளில் 979 மோசமான சாலைகளை தேர்வு செய்து மொத்தம் தம் 141 கி.மீ. தொலைவுக்கு இந்த புதிய சாலைகள் போடப்படுகின்றன. வரும் 23-ம் தேதி இந்த சாலைகள் மறுசீரமைப்பு திட்டத்துக்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. தொடங்கிய ஒரே மாதத்தில் பணிகளை முடிக்க ஆணையர் சித்ரா உத்தரவிட்டுள்ளார். என்று தெரிவித்தனர்.
ஆணையர் சித்ராவின் முயற்சியால் ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு நடக்கும் இந்த சாலை மேம்பாட்டு பணி களால், நீண்ட காலமாக மிக மோசமாக காணப்படும் சாலை களுக்கு விமோசனம் கிடைக்க உள்ளதால் மக்கள், வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.