தமிழகம்

மகளிர் உரிமைத் தொகை ரூ.3 ஆயிரம்: அதிமுக தேர்தல் அறிக்கையில் சேர்க்கக் கோரிக்கை

செய்திப்பிரிவு

மகளிர் உரிமைத் தொகை ரூ.3 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என அதிமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக அமைக்கப்பட்ட 10 பேர் கொண்ட குழு சென்னையில் இன்று கூடுகிறது. இதில், என்னென்ன அம்சங்களை தேர்தல் வாக்குறுதியாக சேர்ப்பது, மக்களிடம் கருத்துக் கேட்கும் பயணத் திட்டம் வகுப்பது போன்றவை குறித்து ஆலோசிக்கப்பட உள்ளது.

அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி, கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது, குல விளக்கு திட்டத்தின் கீழ் அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் ரூ.1,500 வழங்கப்படும் என்று அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், தனது வானூர் பிரச்சாரத்தில், “அதிமுக ஆட்சி அமைந்ததும் மகளிர் உரிமைத் தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்" என்று அறிவித்தார். இதை மூவாயிரமாக உயர்த்தி தேர்தல் அறிக்கையில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

SCROLL FOR NEXT