தமிழகம்

பிராட்வேயில் ரூ.27 கோடியில் நீர்த்தேக்க தொட்டி திறப்பு

செய்திப்பிரிவு

சென்னை: சென்னை குடிநீர் வாரி​யம் சார்​பில் துறை​முகம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட பிராட்​வே, டேவிட்​சன் தெரு​வில் ரூ.27.50 கோடி​யில் 30 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட நீர்​தேக்​கத்​தொட்டி அமைக்​கப்​பட்​டுள்​ளது. முதல்​கட்​ட​மாக 15 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட கீழ்​நிலை நீர்​தேக்​கத் தொட்டி தொடக்க விழா நேற்று நடை​பெற்​றது.

இதில் நகராட்சி நிர்​வாகத் துறை அமைச்​சர் கே.என்​.நேரு, இந்து சமய அறநிலை​யத்துறை அமைச்​சர் சேகர்​பாபு ஆகியோர் பங்​கேற்று கீழ்​நிலைநீர்த்​தேக்​கத் தொட்​டி​யின் செயல்​பாட்​டைத் தொடங்​கி​வைத்​தனர்.

          

இத்​திட்​டத்​தின் முதல்​கட்​ட​மாக சுமார் 1,141 மீட்​டர் நீளத்​துக்கு 400 மி.மீ. விட்​டம் கொண்ட குடிநீர் குழாய் பதிக்​கும் பணி​கள் முடிக்​கப்​பட்டு 15 லட்​சம் லிட்​டர் கொள்ளளவு கொண்ட கீழ் ​நிலை தொட்டி பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​பட்​டுள்​ளது.

2-ம் கட்​ட​மாக 15 லட்​சம் லிட்​டர் கொள்​ளளவு கொண்ட 2 மேல்​நிலை நீர்த்​தேக்​கத் தொட்​டிகள், சுமார் 963 மீட்​டர் நீளத்​துக்கு 300 மி.மீ. விட்​டம் கொண்ட குடிநீர் குழாய் பதிக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன.

நிர்​ண​யிக்​கப்​பட்ட கால அளவுக்​குள் இப்​பணி​கள் முடிக்​கப்​பட்டு மக்​களின் பயன்​பாட்​டுக்கு கொண்​டு​வரப்​படும். இதன் மூலம் மண்​ணடி, கிளைவ் பேட்​டரி, ஜார்ஜ் டவுன் ஆகிய பகு​தி​களில் உள்ள 70 ஆயிரம் பேர் பயன்பெறு​வர்.

இந்​நிகழ்ச்​சி​யில், சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்​குநர் வினய், சென்னை மாநக​ராட்சி வடக்கு வட்​டார துணை ஆணை​யர் கட்டா ரவி தேஜா, சென்னை குடிநீர் வாரிய பொறி​யியல் இயக்​குநர் உ.பர்​வீஸ், தலை​மைப் பொறி​யாளர் ஏ.ரா​தாகிருஷ்ணன், பகுதி பொறி​யாளர் எம்​.எஸ்​.ஆனந்த் குமார், மண்​டலக்​குழுத் தலை​வர் பி.​ரா​முலு உள்​ளிட்​டோர் கலந்துகொண்டனர்.

SCROLL FOR NEXT