எ.வ.வேலு

 
தமிழகம்

திமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலை துறையில் ரூ.2,000 கோடி ஊழலா? - எ.வ.வேலு மறுப்பு

செய்திப்பிரிவு

திருவண்ணாமலை: நெடுஞ்​சாலை துறை​யில் ரூ.2,000 கோடி ஊழல் நடை​பெற்​றதாக அமைச்​சர் ஆதவ்​அர்​ஜூனா கூறிவரும் குற்​றச்​சாட்​டுக்கு முன்​னாள் அமைச்​சர் எ.வ.வேலு மறுப்பு தெரி​வித்​துள்​ளார்.

திரு​வண்​ணா​மலை​யில் உள்ள மாவட்ட திமுக அலு​வல​கத்​தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது, பொதுப்​பணித்​துறை அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா நவ.13-ம் தேதி நெடுஞ்​சாலை துறை​யில் ரூ.2,000 கோடி ஊழல் நடந்​திருப்​ப​தாக ஒரு குற்​றச்​சாட்டை முன்​வைத்​திருந்​தார்.

அதற்கு நான் ஏற்​கெனவே முழு விளக்​கம் அளித்​து​விட்​டேன். நெடுஞ்​சாலை துறை​யில் கோட்ட பொறி​யாளர்​கள் மற்​றும் கண்​காணிப்பு பொறி​யாளர்​கள் தலை​மையில்​தான் பணிகள் நடை​பெறும். நான் அமைச்​சராக இருந்த காலத்​தில் ஒப்​பந்​தம் செய்​யப்​படா​மல் எந்த பணிகளும் நடை​பெறவில்லை. உரிய பதிவேடுகளை பார்த்​தால் அது தெரிய​வரும்.

மேலும், கோட்ட பொறி​யாளர் தலை​மையில் ஒப்​பந்​தம் முறை​யாக விடப்​பட்​டுள்​ளதா? கணக்​கு​கள் சரியாக உள்​ளதா? என்​பதை ஒவ்​வொரு ஆண்​டும் ஏப்​ரல் மாதம் உள் தணிக்கை நடை​பெறுகிறது. சாலை​யோர செடிகள் வெட்​டுதல், மரங்​களுக்கு வர்​ணம் பூசி எண் எழுது​தல், பாலங்​கள் சீரமைத்​தல், சிறு​பாலங்​கள் மற்​றும் கல்​வெட்​டுகளின் நீர்​வழி பாதைகளை சீரமைத்​தல், ஆக்​கிரமிப்​பு​களை அகற்​றுதல் போன்ற பணிகள் ஆண்டு முழு​வதும் நடை​பெறும்.

அரசால் ஒதுக்​கப்​படும் நிதி​யில் 80 சதவீத பணம் இப்​பணிகளுக்​கும், மீதமுள்ள 20 சதவீத பணம் மழை மற்​றும் வெள்​ளம் போன்ற அவசர காலங்​களுக்​கும் பயன்​படுத்​தப்​படும். அலு​வலக ஆவணங்​களை ஆய்வு செய்​தாலே உண்மை தன்மை தெரிய​வரும். எனவே, அமைச்​சர் ஆதவ் அர்​ஜூனா கூறிவரும் குற்​றச்​சாட்​டுக்​கும், எனக்​கும் எந்த சம்​பந்​தம் இல்லை.

இந்த ஆட்​சியே ரீல் ஆட்சி தான், எதையும் திட்​ட​மிட்டு கூறமுடி​கிறதா? இவர்​கள் ரியல் ஆட்சி நடத்​து​வது இல்லை, ரீல் ஆட்சி தான் நடத்தி கொண்​டிருக்​கிறார்​கள். எங்​களால் மக்​களுக்கு என்ன செய்ய முடியுமோ அதனை மக்​களோடு மக்​களாக இருந்து திமுக தொடர்ந்து செய்து வரும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT