எண்ணூரில் நேற்று இரவு கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது. தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையில் சென்ற வாகனங்கள் மீது சீறிய கடல் அலை.

 
தமிழகம்

அர்னாப் புயல் எதிரொலி: எண்ணூரில் கடல் சீற்றம் - குடியிருப்பு பகுதிகளுக்குள் நீர் புகுந்தது

செய்திப்பிரிவு

பொன்னேரி: அர்னாப் புயல் எதிரொலியாக நேற்று ஏற்​பட்ட கடல் சீற்​றம் காரண​மாக சென்னை, எண்​ணூர் பகுதி​யில் குடி​யிருப்​பு​களுக்​குள் கடல்​நீர் புகுந்​தது.

ஆந்​திராவில் அர்​னாப் புயல் நேற்று இரவு கரையைக் கடக்க இருந்த நிலை​யில் நேற்று மாலை முதல், வடசென்னை பகுதி​களான எண்​ணூர், திரு​வொற்​றியூர் மற்​றும் திரு​வள்ளூர் மாவட்​டம், பழவேற்​காடு உள்​ளிட்ட பகுதி​களில் கடல் சீற்​றமாக காணப்​பட்​டது.

இதில் எண்​ணூர், பாரதி​யார் நகர் பகுதி​யில் ஆக்​ரோஷமாக எழுந்த கடல் அலைகளால் கடற்​கரையைக் கடந்து, சாலை​யில் பெருக்​கெடுத்து ஓடிய கடல்​நீர், சாலை​யோரங்​களில் நிறுத்​தப்​பட்​டிருந்த இருசக்​கர வாக​னங்​களை அடித்​துச் சென்​றன.

சுனாமியை நினைவூட்டியது

அது​மட்​டுமல்​லாமல் இந்த கடல்​நீர், பாரதி​யார் நகர் பகுதி​யில் உள்ள 6 தெருக்​களின் உள்ளே பெருக்​கெடுத்து வரு​வ​தால், அப்​பகுதி​யில் வசிக்​கும் நூற்​றுக்​கணக்​கான மக்​கள் மிகுந்த அச்​சத்​தில் உறைந்​துள்​ளனர்.

அவர்​கள் தமிழகத்​தில் சுனாமி ஏற்​பட்​டபோது எப்​படி கடல் கொந்​தளித்து கடல்​நீர் ஊர்​களுக்​குள் புகுந்​ததோ, அதுபோல் தற்​போது கடல்​நீர் எண்​ணூரில் குடி​யிருப்​புப் பகுதி​களுக்​குள் புகுந்து வரு​கிறது என்று தெரி​வித்​தனர்.

இதையடுத்து, காவல்​துறை உயரதி​காரி​கள், அப்​பகுதி​களுக்கு விரைந்து, பொதுமக்​களை கடற்​கரை பகுதிகளுக்​குச் செல்​ல​வேண்​டாம், சாலைகளில் சுற்​ற​வேண்​டாம் என, அறி​வுறுத்​தி​யுள்​ளனர்.

அது​மட்​டுமல்​லாமல், திரு​வொற்​றியூர் எம்​எல்ஏ செந்​தில்​குமார், எண்​ணூர் உள்​ளிட்ட பகுதி​களில் ஆய்வு செய்து, காவல் துறை, வரு​வாய்த் துறை உள்​ளிட்ட துறை அதி​காரி​களுக்கு பாது​காப்பு நட​வடிக்​கைகளை மேற்​கொள்ள உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்​கினார்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT