கோப்புப் படம்

 
தமிழகம்

வாக்குச்சாவடிகளில் முதல்முறையாக வாக்காளர்கள் செல்போனை வைக்க தனி அறை

இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்பாடு

செய்திப்பிரிவு

சென்னை: சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் வாக்​குச் சாவடிகளில் குடிநீர் உள்​ளிட்ட குறைந்​த​பட்ச வசதி​களை ஏற்​படுத்த வேண்​டும் என்று 5 மாநில தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்​கு, இந்​திய தேர்​தல் ஆணை​யம் அறி​வுறுத்​தி​யுள்​ளது. வாக்​குச் சாவடிக்கு வெளியே வாக்​காளர்​கள் செல்​போனை பாதுகாப்பாக வைத்​து​விட்டு செல்​ல​வும் முதல்​முறை​யாக வசதி செய்​யப்பட உள்​ளது.

இதுதொடர்​பாக இந்​தியத் தேர்​தல் ஆணை​யம் வெளி​யிட்ட செய்​திக்குறிப்​பில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் உள்​ளிட்ட 5 மாநில சட்​டப்​பேர​வைத் தேர்​தல் 6 மாநிலங்​களில் இடைத் தேர்​தல்​களுக்​கான அட்​ட​வணை கடந்த மார்ச் 15-ம் தேதி அறிவிக்​கப்​பட்​டது. இத்​தேர்​தலை​யொட்​டி, வாக்​குச் சாவடிகளில் ஒவ்​வொன்​றி​லும் உறுதி செய்​யப்​பட்ட குறைந்​த​பட்ச வசதி​கள் செய்யப்​படு​வதை உறுதி செய்ய ​மாநிலங்​களின் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களுக்கு தேர்​தல் ஆணை​யம் உத்​தர​விட்​டுள்​ளது.

          

அதன்​படி, உறுதி செய்​யப்​பட்ட குறைந்​த​பட்ச வசதி​களான குடிநீர், நிழலுடன் கூடிய காத்​திருப்​புப் பகு​தி, தண்​ணீர் வசதி​யுடன் கூடிய கழிப்​பறை, போதிய வெளிச்​சம், மாற்​றுத் திற​ன்வாக்​காளர்​களுக்​கான முறை​யான சாய்​வுதளம், தரப்​படுத்​தப்​பட்ட வாக்​குப்​ப​திவு அறை மற்​றும் முறை​யான வழி​காட்டி பலகைகள் ஆகியவை இடம்​பெற வேண்​டும்.

வாக்காளர்கள் உட்கார பெஞ்ச்: வாக்​காளர்கள் தங்​களது முறைக்​காக காத்​திருக்​கும் போது அமரு​வதற்கு ஏதுவாக, வரிசை​யில் குறிப்​பிட்ட இடைவெளி​களில் பெஞ்​சுகள் அமைக்​க​வும் தலை​மைத் தேர்​தல் அதி​காரி​களிடம் கோரப்​பட்​டுள்​ளது. வாக்​காளர் விழிப்​புணர்வை வலுப்​படுத்த, அனைத்து வாக்​குச்சாவடிகளி​லும் 4 சீரான மற்​றும் தரப்​படுத்​தப்​பட்ட வாக்​காளர் வசதி சுவரொட்​டிகள் முக்​கிய​மாக காட்​சிப்படுத்​தப்​படும்.

சுவரொட்டியில் விவரங்கள்: இந்த சுவரொட்​டியில் வாக்​குச்சாவடி விவரங்​கள், வேட்​பாளர் பட்​டியல், செய்ய வேண்​டியவை மற்​றும் செய்​யக் கூடாதவை, அங்​கீகரிக்​கப்​பட்ட அடை​யாள ஆவணங்​களின் பட்​டியல் மற்​றும் வாக்​குப் பதிவு நடை​முறை ஆகிய முக்கிய விவரங்கள் இடம்பெறும். வாக்​காளர்​கள் தங்​களது வாக்​குச் சாவடி எண் மற்​றும் அந்​தந்த சாவடி​யின் வாக்​காளர் பட்​டியலில் உள்ள வரிசை எண்​ணைக் கண்​டறிய உதவுவதற்​காக, ஒவ்​வொரு வாக்​குச் சாவடி அமை​விடத்​தி​லும் பிஎல்​ஓக்​கள், அதி​காரி​கள் குழு​வுடன் கூடிய வாக்​காளர் உதவி மையங்​கள் அமைக்​கப்​படும். வாக்​காளர்​கள் வாக்​குச் சாவடி வளாகத்தை நெருங்​கும் போது எளி​தில் தெரி​யும் வகை​யில் இந்த உதவி மையங்​கள் முக்​கிய வழி​காட்​டிப்பலகைகளைக் கொண்​டிருக்​கும்.

வாக்​குச் சாவடி நுழைவு வாயிலுக்கு வெளியே வாக்​காளர்​களுக்​கான செல்போன் வைப்பு அறை வசதி முதல்முறையாக அமைக்கப்​பட உள்ளது. வாக்​காளர்​கள், வாக்​குச் சாவடிக்​குள் நுழைவதற்கு முன்பு தங்​களது செல்போனை, நியமிக்​கப்​பட்ட தன்​னார்​வலரிடம் ஒப்​படைத்​து​விட்​டு, வாக்​களித்த பிறகு அதைபெற்​றுக் கொள்​ளலாம். இந்த பணி​களை தேர்​தல் தேதி​களுக்கு முன்​ன​தாகவே முடிக்​கு​மாறு அனைத்து களப் பணி​யாளர்​களும் அறி​வுறுத்​தப்​பட்​டுள்​ளனர். இவ்​வாறு அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது.

SCROLL FOR NEXT