மதுரை: மதுரையில் தமிழக ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்றவர்கள் கைது செய்யபட்டனர்.
மதுரை மாவட்டம் நாகமலை புதுக்கோட்டையில் உள்ள காமராசர் பல்கலைக் கழகத்தின் 57-ம் ஆண்டு பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநரும், மதுரை காமராசர் பல்கலைக் கழக வேந்தருமான ஆர்.என்.ரவி கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்குகிறார்.
இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட உள்ளதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை அடிப்படையில் இந்திய மாணவர் சங்கர் மாவட்ட செயலாளர் டேவிட் ராஜ் மற்றும் சுபாஷ் சந்திர போஸ் ஆகியோரை சமயநல்லூர் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.