தமிழகம்

நதிகள் இணைப்பால் 100 ஆண்டுகளுக்கு இந்தியாவில் தண்ணீர் பற்றாக்குறை இருக்காது: அமித் ஷா உறுதி

செய்திப்பிரிவு

சென்னை: “பிரம்​மபுத்​திரா முதல் காவிரி மற்​றும் கோதாவரி வரை முக்​கிய நதி​களை இணைப்​ப​தன் மூலம், அடுத்த 100 ஆண்​டு​களுக்கு இந்​தி​யா​வில் தண்​ணீர் பற்​றாக்​குறை ஏற்​ப​டா​மல் தடுக்க முடி​யும்” என மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா தெரி​வித்​தார்.

சென்​னையை அடுத்த கோவளத்​தில் உள்ள நட்​சத்​திர ஓட்​டலில் 31-வது தென்​மாநில முதல்வர்கள் மாநாடு நேற்று நடந்​தது. இதில் மத்​திய உள்​துறை அமைச்​சர் அமித்ஷா பேசி​ய​தாவது: தென்​மாநிலங்​களின் வளர்ச்சி நாட்​டின் முன்​னேற்​றத்​துக்கு மிக முக்​கிய​மானது. தகவல் தொழில்​நுட்​பம், வாகன உற்​பத்​தி, மருந்து உற்​பத்தி மற்​றும் உள்​கட்​டமைப்பு வளர்ச்​சி​யில் தென்​மாநிலங்​கள் முக்​கிய பங்கு வகிக்​கின்​றன. கண்​டு​பிடிப்பு மற்​றும் வரு​வாய் ஈட்​டும் துறை​களில் தென்​மாநிலங்​கள் பல சிறந்த மரபு​களை உரு​வாக்​கி​யுள்​ளன.

பிரதமர் நரேந்திர மோடி 80-வது சுதந்​திர தின விழா​வின் போது, கடந்த 70 ஆண்​டு​களில் அடைய முடி​யாத இலக்​கு​களை அடுத்த 5 முதல் 7 ஆண்​டு​களில் நாம் அடைய வேண்​டும் என்​றும், அப்​போது​தான் உலகளா​விய போட்​டி​யில் நாம் நமது இடத்தை உறு​திப்​படுத்த முடி​யும் என்​றும் கூறி உள்​ளார். தென் மாநிலங்​களின் முன்​னேற்​றம் தண்​ணீரைச் சார்ந்​துள்​ளது. விவ​சா​யம், தொழில், ஆரோக்​கிய​மான குடிமக்​கள் மற்​றும் சுற்​றுச்​சூழல் என அனைத்து துறை​களி​லும் தண்​ணீர் தென்​மாநிலங்​களின் ஆன்​மா​வாக உள்​ளது.

ஒரு மாநிலத்​தின் நலன்​களை பாது​காப்​பது தவறல்ல. இந்த செயல்​முறை​யி​னால் பல ஆண்​டு​களாக தண்​ணீர் வீணாக கடலில் கலக்​கும் நிலை ஏற்​பட்​டால், அது எந்த நலனை​யும் தரா​து. பிரம்​மபுத்​திரா முதல் காவிரி மற்​றும் கோதாவரி வரை முக்​கிய நதி​களை இணைப்​ப​தன் மூலம், அடுத்த 100 ஆண்​டு​களுக்கு இந்​தி​யா​வில் தண்​ணீர் பற்​றாக்​குறை ஏற்​ப​டா​மல் தடுக்க முடி​யும். இந்த முயற்சி எரிபொருளைச் சேமிக்​க​வும், சுற்​றுச்​சூழலை மேம்​படுத்​த​வும், செலவு குறைந்த போக்​கு​வரத்து முறையை உரு​வாக்​க​வும் உதவும்.

தென்​மாநிலங்​களில் நிலு​வை​யில் உள்ள நதிநீர் பிரச்​சினை​களை ஜல் சக்தி அமைச்​சகம், உள்​துறை அமைச்​சகம், மாநிலங்​களுக்கு இடையே​யான கவுன்​சில் ஆகியவை சம்​பந்​தப்​பட்ட மாநிலங்​களு​டன் இணைந்து விரை​வாக தீர்க்க வேண்​டும். தென்​மாநிலங்​கள் இந்த ஆலோ​சனையை ஏற்​றுக்​கொண்​டு, பரஸ்பர பேச்​சு​வார்த்தை மற்​றும் ஆக்​கப்​பூர்​வ​மான தீர்​வு​கள் மூலம் நிலு​வை​யில் உள்ள நதிநீர் தகராறுகளை விரை​வாக தீர்க்​க முன்​வர வேண்​டும்​. இவ்​வாறு அவர்​ பேசி​னார்​.

SCROLL FOR NEXT