ஜடிபந்தனம் செய்யப்பட்ட (சரி செய்யப்பட்ட) காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் உற்சவர் சிலை.
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சேதமடைந்த உற்சவர் சிலை சீரமைக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல ஆனி, ஆடி மாதங்களிலும் கருட சேவை உற்சவம் நடப்பது வழக்கம்.
அதன்படி, ஆனி மாதத்துக்கான கருடசேவை உற்சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஆடி மாதத்துக்கான கருடசேவை உற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெறுவதாக இருந்தது. காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் சேதமடைந்த உற்சவர் சிலை சீரமைக்கப்பட்டு கடந்த 8-ம் தேதி அதிகாலை சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டதை தொடர்ந்து, பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர்.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வைகாசி பிரம்மோற்சவத்தின் 3-ம் நாள் கருட சேவை உற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். அதேபோல ஆனி, ஆடி மாதங்களிலும் கருட சேவை உற்சவம் நடப்பது வழக்கம்.
அதன்படி, ஆனி மாதத்துக்கான கருடசேவை உற்சவம் கடந்த ஜூன் 25-ம் தேதி நடந்தது. தொடர்ந்து ஆடி மாதத்துக்கான கருடசேவை உற்சவம் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெறுவதாக இருந்தது.
இந்நிலையில், கடந்த ஜூலை 3-ம் தேதி உற்சவருக்கு ஜேஷ்டாபிஷேகம் நடந்தபோது, சிலையில் கால் பாதம், கழுத்து, காது உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்த நிலையில் இருப்பது தெரியவந்தது.
இதனால், ஆடி கருட சேவை நடைபெறாது என கோயில் நிர்வாகம் அறிவித்தது. இதனால் சுவாமியை தரிசிக்க முடியாமல் ஏமாற்றமடைந்த பக்தர்கள், சேதமடைந்த சிலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இதைத் தொடர்ந்து, சேதமான சிலையை சீரமைக்க இந்து சமய அறநிலையத் துறை முடிவு செய்தது. அதன்படி, கடந்த 6, 7 ஆகிய இரு நாட்கள் வரதராஜ பெருமாள், தேவி, பூதேவி உற்சவர் சிலைகளை சீரமைக்கும் திருப்பணி நடந்தது.
இந்த சீரமைப்புப் பணி நடந்த நாட்களில் மூலவர் மற்றும் பல்லி தரிசனம் செய்ய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. தொடர்ந்து கடந்த 7-ம் தேதி உற்சவர் சிலை சீரமைப்பு பணி நிறைவு பெற்றது.
இதையடுத்து வேதமந்திரங்களுடன், சீரமைக்கப்பட்ட உற்சவர் சிலைகளுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னர் தேவி, பூதேவியுடன் மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய உற்சவர் வரதராஜ பெருமாளைதரிசிக்க கடந்த 8-ம் தேதிமுதல் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
இதுகுறித்து கோயில் உதவி ஆணையர் சீனுவாசன் கூறுகையில், “சேதமடைந்த சிலை கடந்த ஆக. 6, 7 தேதிகளில் சீரமைக்கப்பட்டது. உரிய அனுமதி பெற்று ஆகம விதிகளைப் பின்பற்றி சரி செய்யப்பட்டது.
பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ஆக.8-ம் தேதிமுதல் இந்தச் சிலை பக்தர்கள் வழிபாட்டுக்கு அனுமதிக்கப்படுகிறது” என்றார்.